பழைய நகைகளுக்கு குட்பை! துபாயில் வீடுகளை நோக்கி நகரும் முதலீட்டாளர்கள்: லாபம் தரும் புதிய வழி
துபாய்: துபாய் உள்ளிட்ட நாடுகளில் புது டிரெண்டு ஒன்று உருவாகி வருகிறது.. தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், பீரோவிலுள்ள தங்க நகைகளை எல்லாம் விற்று காசாக்கி வருகிறார்களாம்.. தங்கத்தின் அதீத விலை உயர்வானது, துபாய் மக்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளதாம்.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
இன்றைய காலக்கட்டத்தில் தங்கம் என்பது வெறும் ஆபரணமாக மட்டுமல்லாமல், அது ஒரு மிகப்பெரிய முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உலகிலேயே தங்கம் வர்த்தகத்திற்கு பெயர்பெற்ற துபாயில், கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்துள்ளது.

தங்கம் விற்பனை துபாயில்
சர்வதேசச் சந்தையில் நிலவும் பல்வேறு பொருளாதாரக் குழப்பங்கள் மற்றும் போர் பதற்றங்கள் காரணமாக, பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் பக்கம் முதலீட்டாளர்கள் திரும்பியிருக்கிறார்கள்.. இதன் விளைவாகத்தான், தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
ஆனால் இந்த அதீத விலை உயர்வை துபாயில் வாழும் சாதாரண மக்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். வழக்கமாக விலை உயரும்போது மக்கள் தங்கம் வாங்குவதை குறைத்துக் கொள்வார்கள். ஆனால் துபாயில் அப்படியில்லை..
பீரோவில் உள்ள தங்க நகைகள்
தங்களிடம் இருக்கும் பழைய நகைகளை விற்று, அதைப் பெரிய தொகையாக மாற்றி வருகிறார்கள். பல ஆண்டுகளாக பீரோவில் பூட்டி வைக்கப்பட்டிருந்த நகைகள், பழைய மாடல் நகைகள் மற்றும் அவ்வப்போது பரிசாக கிடைத்த தங்கக் காசுகள் என அனைத்தையும் மக்கள் நகைக்கடைகளில் கொடுத்து பணமாக்கி வருகின்றனர்.
துபாயின் புகழ்பெற்ற 'கோல்ட் சூக்' பகுதிகளில் இப்போது நகை வாங்குபவர்களை விட, விற்பவர்களின் கூட்டமே அதிகமாகக் காணப்படுகிறதாம்.. இப்படி நகையை விற்றுக் கிடைக்கும் பணத்தை மக்கள் வீணாக்குவதில்லை.
தங்கம் - நிலப்பத்திரம் முதலீடு
துபாயை பொறுத்தவரை ரியல் எஸ்டேட் துறை மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் தங்கத்தில் சேமித்தவர்கள், இப்போது அந்த லாபத்தை நிலத்திலோ அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளிலோ முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர்.
தங்கம் ஒரு கட்டத்திற்கு மேல் பெரிய வருமானத்தை தராது என்றும், ஆனால் ஒரு நிலத்தையோ அல்லது வீட்டையோ வாங்கினால் அதிலிருந்து மாதந்தோறும் வாடகை வருமானம் கிடைக்கும் என்பதையும் துபாய் மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.
மேலும், துபாய் போன்ற ஒரு நவீன நகரத்தில் நிலத்தின் மதிப்பு சில ஆண்டுகளில் பல மடங்கு உயரும் என்பதால், தங்கத்தை விட நிலமே சிறந்த லாபம் தரும் சொத்தாக அவர்களுக்கு தெரிகிறது.
பொருளாதார வல்லுநர்களும் இதை ஒரு புத்திசாலித்தனமான நகர்வாகவே பார்க்கிறார்கள். "குறைந்த விலையில் வாங்கிய தங்கத்தை, விலை உச்சத்தில் இருக்கும்போது விற்று லாபம் பார்ப்பதுதான் சரியான முதலீட்டு முறை" என்கிறார்கள்...
பழைய தங்க நகைகள்
பொதுவாக நகைகளை விற்கும்போது செய்கூலி, சேதாரம் என்று 10 முதல் 15 சதவீதம் வரை பணம் குறைய வாய்ப்புண்டு. ஆனாலும், இப்போது தங்கம் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், அந்த சிறிய இழப்புகளை பற்றி மக்கள் கவலைப்படுவதில்லை.
அதுமட்டுமல்ல, பழைய நகைகளை உருக்கி புதிய டிசைனில் நகை வாங்குவதால் எந்த பயனும் இல்லை என்பதையும் துபாய் மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர்.. அதனால்தான் நிரந்தரமான அசையா சொத்தாக அதனை மாற்றுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
தங்கம் என்பது கஷ்ட காலத்திற்கு உதவும் சேமிப்பாக இருந்து வந்த நிலையில், இப்போது அந்த இடத்தை நில பத்திரங்கள் பிடித்துவிட்டன.. துபாய் மக்களின் இந்த மனமாற்றம், வரும் காலங்களில் ரியல் எஸ்டேட் துறையில் இன்னும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.... பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications