திடீருன்னு அதிரடி காண்பிக்கும் பாகிஸ்தான் டீம்.. வரிசையாக வெற்றிகள்.. பின்னணியில் 6 காரணங்கள்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்த உலக கோப்பை தொடரை வெல்ல வலுவான போட்டியாளர் என்று கூறினார், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். அவர் மட்டுமல்ல பல நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் கூட இப்போது அப்படி நம்பத் தொடங்கியுள்ளனர்.

பாகிஸ்தான் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. குழுவில் முதலிடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் அணி தற்போது அரையிறுதியில் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆனால், உலக கோப்பை போட்டித் தொடர் தொடங்கும் முன் அப்படி யாரும் நினைத்திருக்கவில்லை. ஏனெனில், கடந்த இரண்டு முறை பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியவில்லை.

பல விஷயங்களில் மாற்றம்

பல விஷயங்களில் மாற்றம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஏற்பட்ட சலசலப்பு மற்றும் துணை ஊழியர்கள் மாற்றத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் அணியின் நிலைமை மோசமாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் டீமில் பல விஷயங்கள் மிக வேகமாக மாறியது. 2009 டி20 உலக கோப்பை சாம்பியன் மீண்டும் அதே வேகத்தில் எழுந்து நிற்கிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஹோம் கிரவுண்ட்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஹோம் கிரவுண்ட்

2009ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூரில் இலங்கை அணி வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து பாகிஸ்தானுக்கு வெளிநாட்டு அணிகளின் வருகை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு அங்கு சர்வதேச கிரிக்கெட் தொடங்கியது. இருப்பினும், சமீபத்தில், நியூசிலாந்து அணி போட்டி தொடங்குவதற்கு முன்பே தங்கள் சுற்றுப்பயணத்தை பாதியிலேயே விட்டுச் சென்றது. இதையடுத்து இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானுக்கு வர மறுத்ததால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதன் சொந்த மைதானமாக மாறியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தான் அணிக்கு அதிக ரசிகர்கள் ஆதரவு உள்ளது, அதே போல் கடந்த 5 ஆண்டுகளில் இந்த நாட்டில் பாகிஸ்தான் தொடர்ந்து 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Recommended Video

    Ind vs NZ போட்டியில் எச்சரிக்கையா இருக்கனும்.. Zaheer Khan எச்சரிக்கை
    சிக்கல் ஏற்பட்டால் மீண்டு விடுகிறது

    சிக்கல் ஏற்பட்டால் மீண்டு விடுகிறது

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எப்போது பிரச்சனையில் சிக்கினாலும், மீண்டு வந்து சிறப்பாக செயல்பட்ட வரலாறு உண்டு. 1992ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் அணியில் பல பிரச்சினைகள் இருந்தன. இதனுடன் வக்கார் யூனிஸ் போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர் காயம் அடைந்த சம்பவமும் நடந்தது. ஆனால் அப்போது பாகிஸ்தான்தான் உலக கோப்பையை வென்றது. லாகூரில் இலங்கை அணி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்த நிலையிலும், சோயிப் அக்தரை அணியில் சேர்க்காத விவகாரத்தில் தலைமை தேர்வாளர் அப்துல் காதர் ராஜினாமா செய்திருந்த மோதலுக்கு நடுவேயும்தான், 2009ம் ஆண்டு பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பையை வென்றது.

    மேத்யூ ஹைடன் மாதிரி சர்வதேச வீரர்கள்

    மேத்யூ ஹைடன் மாதிரி சர்வதேச வீரர்கள்

    இந்த முறையும் பயிற்சியாளர்கள்- மிஸ்பா-உல்-ஹக் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் உலகக் கோப்பைக்கான அணியில் இருந்து ராஜினாமா செய்தனர். ஆனால் மேத்யூ ஹைடன் மற்றும் வெர்னான் பிலாண்டர் போன்ற முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கான பயிற்சியாளர் பணிகளில் சேர்க்கப்பட்டனர். அணியும் அதன் மூலம் பயனடைவதாகத் தெரிகிறது.

    பாபர் விரும்பும் அணி

    பாபர் விரும்பும் அணி

    ஒரு கேப்டன் தனக்கு விருப்பமான அணியைப் பெறுவது மிகவும் முக்கியம். பாபருக்கு அது நடந்தது. 15 பேர் கொண்ட அணியில் கடைசி நிமிடத்தில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. இவர்களில் ஒருவரான ஃபகார் ஜமான் இதுவரை இரண்டு போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பாபர் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தொடக்க ஜோடியாக களமிறங்கி வருகிறார்கள். அது இதுவரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஜோடியின் சராசரி 67.30 ஆகும். பந்துவீச்சும் நல்ல நிலையில் உள்ளது. ஷாஹீன் ஷா அப்ரிடி இந்த பந்துவீச்சு தாக்குதலில் முன்னணியில் இருப்பதாக தெரிகிறது.

    சோயிப் மாலிக் மற்றும் முகமது ஹபீஸ் அனுபவம்

    சோயிப் மாலிக் மற்றும் முகமது ஹபீஸ் அனுபவம்

    கிறிஸ் கெயிலைத் தவிர 1990களில் சர்வதேச அரங்கில் அறிமுகமாகி இப்போதும் டி20 போட்டிகளில் ஆடும் ஒரே மூத்த வீரர் சோயிப் மாலிக் மட்டுமே. சோயிப் மாலிக் காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறார். விளையாட்டை நன்றாக புரிந்துகொள்கிறார். அவர் மிகவும் குறைத்து மதிப்பிட முடியாதவர். ரன்களை சேஸ் செய்யும்போது சோயிப் மாலிக் வேறு லெவல் பிளேயராக மாறுகிறஆர். பாகிஸ்தான் வெற்றிகரமாக சேஸ் செய்த ஆட்டங்களில் சோயிப் மாலிக் 18 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். டி20யில் இது உலக சாதனை. நியூசிலாந்துக்கு எதிராகவும், அவர் அணியை தேற்றி 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் எடுத்து வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார்.
    இது தவிர பாகிஸ்தான் அணிக்கு ஹபீஸின் பந்துவீச்சு பெரிதும் உதவுகிறது. இதனுடன், ஹபீஸின் அனுபவமும் புத்திசாலித்தனமும் உதவி வருகிறது.

     பாகிஸ்தான் சூப்பர் லீக்

    பாகிஸ்தான் சூப்பர் லீக்

    2009 முதல் பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்கப்படவில்லை, பின்னர் அவர்களின் ஆட்டம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. இதற்குக் காரணம், வீரர்கள் உயர்தர டி20 கிரிக்கெட்டை விளையாட முடியாமல் போனதும் ஆகும். ஆனால், 2015ல் தொடங்கிய பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் தாக்கம் இப்போது தெரிகிறது. இது ஒரு முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. இந்திய வீரர்களைத் தவிர, உலகின் பல பெரிய வீரர்கள் பிஎஸ்எல்லில் விளையாடுகின்றனர். இந்த தலைமுறையின் பாகிஸ்தான் வீரர்கள் டி20 போட்டிகளில் அழுத்தத்தை கையாளவும் கற்றுக்கொண்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+