மத்திய கிழக்கு முழுவதும் ஒலித்த சைரன் சத்தம்.. பங்கரில் பதுங்கிய மக்கள்! மோசமடையும் நிலைமை!
துபாய்: ஈரானுக்கு அமெரிக்கா கொடுத்த கெடு இன்னும் சில மணி நேரங்களில் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில், தற்போது மத்திய கிழக்கு முழுவதும் சைரன் சத்தம் ஒலித்திருக்கிறது.
போர் நிறுத்தம் தொடர்பாக, நான் முன் வைத்த நிபந்தனைகளை ஏற்கவில்லை எனில், ஈரானின் நாகரிகத்தையே அழிப்பேன் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

நாளை அதிகாலை 5.30 மணியுடன் டிரம்ப் கொடுத்த காலக்கெடு நிறைவடைகிறது. எனவே ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானங்கள் ஈரான் நோக்கி புறப்பட்டிருக்கின்றன. நாளை காலை ஈரான் பெரிய தாக்குதலை எதிர்கொள்ள இருக்கிறது. மறுபுறம் பேச்சுவார்த்தைக்கான காலக்கெடுவை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்க பாகிஸ்தான் முயன்று வருகிறது.
இருப்பினும் இது தொடர்பான முடிவு ஈரான் தரப்பிலும், அமெரிக்கா தரப்பிலும் இன்னும் எடுக்கப்படவில்லை. இப்படி இருக்கையில், மத்திய கிழக்கு முழுவதும் சைரன் சத்தம் ஒலித்து வருகிறது.
தற்போது மத்திய கிழக்கின் நிலைமை என்ன?
பஹ்ரைனில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்துள்ளன. தங்கள் நாட்டை இலக்காகக் கொண்ட ஏவுகணைத் தாக்குதலை வெற்றிகரமாக இடைமறித்ததாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களைத் தங்கள் வான் பாதுகாப்புப் படைகள் எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக", நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு குவைத் தனது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பாதுகாப்புக்காக சைரன் ஒலிக்கப்படுகிறது. சைரன் சத்தம் கேட்டால் உடனே, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என துபாய் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications