தோனி மாதிரியே 'கன்ஷாட்' கொண்டாட்டம் ..யாருப்பா இந்த ஆசிப் அலி.. என்னா அடி.. பாகிஸ்தானின் பினிஷர்!
துபாய்: கிரிக்கெட் உலகத்திற்கு தோனி போலவே, புது பினிஷர் வந்துள்ளார் என்று ரசிகர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலி பற்றி சிலாகித்து புகழ்ந்து கொண்டிருந்த நேரத்தில், ஆசிப் அலி, தோனியை போலவே Gunshot வகையில் வெற்றியை கொண்டாடி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையேயான ஆட்டம் அனல் பறந்தது. ஆப்கன் சுழல் பந்து வீச்சாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அருமையாக வீசி பாகிஸ்தானை திணறடித்தனர்.
கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. அப்போதுதான் ஆசிப் அலி வழக்கம்போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிக் கொண்டு வந்தார்.

4 சிக்சர்கள்
18வது ஓவரை கரிம் ஜனத் என்ற வேகப் பந்து வீச்சாளர் வீசியபோது 6 பந்துகளில் 4 சிக்சர்களை விளாசி, பாகிஸ்தானை வெற்றிபெறச் செய்தார் ஆசிப் அலி. மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் மகிழ்ச்சியில் குதித்து ஆட்டம் போடாத குறையாக கொண்டாட்டத்தை வெளிப்படுத்த இந்த ஷாட்டுகள் காரணமாக மாறியது.

அபாயகரமான பேட்ஸ்மேன்
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஆசிப் அலி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரு போட்டிகளிலும் சேர்த்து ஆசிப் அலி வெறும் 19 பந்துகளில் 52 ரன்களை விளாசியுள்ளார். இதில் சிக்சர்கள் 7, பவுண்டரி 1. இரு போட்டிகளிலும் அவர் அவுட் ஆகாமல் பினிஷருக்கான வேலையை கச்சிதமாக பார்த்தார். ஸ்ட்ரைக் ரேட் 273.68 வைத்துள்ளார் என்றால் எந்த அளவுக்கு டேஞ்சரஸ் பேட்ஸ்மேன் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

துப்பாக்கி மாதிரி
ஒரு கால கட்டத்தில் இந்திய அணியின் மகேந்திர சிங் தோனி, இவ்வாறு ஒரு பினிஷர் என்ற வகையில் சிறப்பாக ஆடினார். அதுபோல இப்போது ஆசிப் அலி ஆடி வருகிறார் என்று ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று வெற்றிக்கான ரன்களை அடித்த பிறகு ஆசிப் அலி, பேட்டை, தனது தோள்பட்டையில் வைத்து துப்பாக்கி சுடுவது போல சுட்டுக் வெற்றியைக் கொண்டாடினார். இது போன்ற கொண்டாட்டம் ஒன்றும் புதிது கிடையாது. மகேந்திர சிங் தோனி 2005ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் விளாசி விட்டு இவ்வாறு ஒரு கொண்டாட்டத்தை செய்தார். ஷாட்டுகள் மட்டும் கிடையாது ,கொண்டாட்டமும் மகேந்திர சிங் தோனி போல இருப்பதாக நெட்டிசன்கள் புகழ்ந்த படி தோனி கொண்டாட்டம் மற்றும் ஆசிப் அலி புகைப்படங்களை வெளியிட்டு மீம் போட்டு வருகின்றனர்.

தோனி மாதிரியே
அப்படியே தோனி மாதிரியே இருக்கிறது பாருங்கள் என்று இரு படங்களையும் வெளியிட்டுள்ளார் இந்த நெட்டிசன். அட, ஆமால்ல என்பதை போல உள்ளன இரு படங்களும்.
Recommended Video

இதோ பாருங்க
இதோ இன்னொரு கோணத்தில் பாருங்கள். இப்பவும் துப்பாக்கியை வானத்தை நோக்கி பிடிப்பதை போன்ற தோற்றத்தில் இருவரும் பேட்டுடன் உள்ளனர். ஒரு பக்கம் கோலி மாதிரி பாபர் என்கிறார்கள், இன்னொரு பக்கம் தோனி மாதிரி ஆசிப் என்கிறார்கள். இந்தியாவை ஒப்பிடாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இல்லை என்பது மட்டும் நிச்சயம்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications