பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: அடிதடி வேண்டாம் ரசிகர்களே அமைதியாக இருங்க- ரஷீத் கான் உருக்கம்
துபாய்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே இன்று உலக கோப்பை சூப்பர் 12ம் சுற்றுக்கான போட்டி நடைபெற உள்ளது. இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கும்.
ஆப்கானிஸ்தான் ஏற்கனவே ஸ்காட்லாந்து அணியை அபாரமாக வெற்றி கண்டு, ரன் ரேட்டில் சூப்பராக இருக்கிறது. எனவே பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே உள்ளது.
ஒருவேளை இன்றைய போட்டியில் பாகிஸ்தான் தோற்றால், பிறகு, சூப்பர் 12 சுற்றுகளில், வேறு எந்த போட்டியிலும் தோற்று விடக் கூடாது என்ற பதற்றத்தோடு பாகிஸ்தான் ஆட வேண்டிய நிலை ஏற்படும்.

கிரிக்கெட்டில் கவனம்
இந்த நிலையில்தான், ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்டார் ஸ்பின் பந்து வீச்சாளர் ரஷீத் கான், ஒரு பேட்டியளித்துள்ளார். கிரிக்கெட்டில் மட்டுமே எங்கள் கவனம் இருக்கும். வேறு எந்த விஷயத்திலும் கவனம் கிடையாது. விளையாட்டை ரசித்து ஆடுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

பரம வைரிகள்
இந்தியா-பாகிஸ்தான் போட்டியை விடவும், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் போட்டி டென்ஷனானது. இரு நாடுகளும் பரம வைரி போல மோதுகின்றன. 2019ம் ஆண்டு, உலக கோப்பை கிரிக்கெட்டின்போது, ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் போட்டி நடந்தபோது மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இரு நாட்டு ரசிகர்களும் மோதிக் கொண்டனர். வீரர்கள் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்
இதுகுறித்து ரஷீத் கான் கூறுகையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகள் எப்போதுமே நல்ல போட்டியாக இருக்கும். ஆனால் அது விளையாட்டு என்ற அளவில் மட்டுமே இருக்க வேண்டும். ரசிகர்கள் போட்டியை மட்டும் ரசித்து பார்க்க வேண்டும். அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 2019ல் நடைபெற்ற மாதிரி சம்பவம் மீண்டும் நடக்க கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

முடிந்தது முடிந்து போனது
உலக கோப்பை மட்டுமே எங்கள் மனதில் உள்ளது. 5 போட்டிகளில் 3 போட்டிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். முந்தைய காலங்களில் என்ன நடந்தது என்பது பற்றி யோசிக்கவில்லை. அது எங்கள் கைகளில் இல்லை. எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயத்தை பற்றி எப்படி நினைக்க முடியும்.

கூடுதல் நெருக்கடி வேண்டாம்
நாங்கள் அதைப் பற்றி சிந்திக்கக்கூடாது, எங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஒரு அணியாக, நாங்கள் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடுவதில் கவனம் செலுத்துகிறோம். இவ்வாறு ரஷீத் கான் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தோல்வி அடைந்தால்
ஒருவேளை இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தாலும் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான தோற்றாலும் கூட அறையில் செல்வதற்கான வாய்ப்பு உயிர்ப்போடு இருக்கும் உழைப்பு குறைவு என்றாலும் கூட வாய்ப்பு இருக்கும் என்ற வருத்தம் ஆனால் இதையெல்லாம் இந்திய அணி நம்பிக் கொண்டு இருக்க முடியாது யோசனை உட்பட இனிவரும் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெறுவது மட்டுமே அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை உறுதியாக தக்கவைத்துக்கொள்ள ஒரே வாய்ப்பாக இருக்கும்.












Click it and Unblock the Notifications