யாரு உள்ளே, யாரு வெளியே.. இன்று ரிசல்ட் தெரிந்துவிடும்! மும்பை, ராஜஸ்தான் இடையே அனல் பறக்கும் மேட்ச்
துபாய்: நடப்பு ஐபிஎல் சீசனிலேயே இதுவரை இல்லாத பெரும் பரபரப்பான போட்டி இன்று நடைபெற உள்ளது.
ஏனெனில் இன்று களத்தில் சந்திக்க உள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுமே வெற்றி பெற்றேயாக வேண்டும், அல்லது வெளியேற வேண்டும் என்ற சூழ்நிலையோடு முஷ்டியை முறுக்க உள்ளன.
நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் போய் விட்டது சிஎஸ்கே. பின்னாடியே, நானும் வருகிறேன் என்று ரிஷப் பந்த்தின் டெல்லி கேபிடல்ஸ் அணியும் போயாச்சு.
முக்கியமான போட்டி என்பதால் இரு அணிகளின் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இந்த போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

யாருக்கு சான்ஸ்
கிங் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் தங்கள் இடத்தை உறுதி செய்து விட்டது. 4வது அணியாக உள்ளே நுழைய வேண்டியது யார்.. இதுதான் இப்போது இருக்கும் ஒரே கேள்வி. கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகியவற்றில் எந்த அணிக்கு வேண்டுமானாலும் அந்த சான்ஸ் கிடைக்க கூடும்.

வெற்றி மட்டுமே தேவை
அதற்கு தேவை, வெற்றி மட்டுமே. சார்ஜாவில் இன்று இரவு நடைபெறும் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையேயான போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை உயிர்ப்போடு வைத்திருக்க முடியும். ஆனால், தோற்றால், பெட்டியை கட்டி இந்தியா போற பிளைட் எத்தனை மணிக்கு.. என்று கேட்பதை தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை.

முக்கியமான போட்டி
எனவேதான், இதனை Do or die match என்று கூறுகிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள். நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் பவுலிங்கில் தீயாக இருந்தாலும் பேட்டிங்கில் பஞ்சு மூட்டையாக சிதறிப்போகிறது. ஆனால் ராஜஸ்தான் அந்த விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ராங்.
Recommended Video

சிஎஸ்கேவுக்கு எதிராக சேஸிங்
சிஎஸ்கே அணிக்கு எதிராக அவர்கள் செய்த சேஸிங் ரசிகர்கள் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், சிவம் தூபே என ஆளாளுக்கு சிக்சர் அடிப்பதை சிங்கிள் ஓடுவதை போல ஈஸியாக செய்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications