நியூசிலாந்திடம், ஆப்கானிஸ்தான் தோற்றால் என்னவாகும்? நிருபர் கேள்விக்கு சட்டுன்னு ஜடேஜா சொன்ன பதில்
துபாய்: நியூசிலாந்துக்கு எதிரான நாளைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தால் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா அளித்த அசத்தல் பதில் தற்போது வைரலாக சுற்றி வருகிறிது.
Recommended Video
நடப்பு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடனும், அடுத்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடனும், இந்தியா தோல்வியடைந்தது.
அதே நேரம் 4 போட்டிகளில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. நியூசிலாந்து அணியை பொருத்தளவில் இதுவரை பாகிஸ்தானுடன் மட்டும் தோல்வியை சந்தித்துள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் அணியை அந்த அணி சந்திக்கிறது.

இதே வேகம் வேண்டும்
இதில் ஒருவேளை நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும். இந்தியாவை பொறுத்த அளவில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுடன் அபாரமாக விளையாடி வெற்றியை சுவைத்துள்ளது. நாளைய போட்டியில் ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அதன்பிறகு நமீபியா உடன் இந்திய அணி விளையாடும் போட்டி முக்கியத்துவம் பெறும். அதிலும் கடந்த இரண்டு போட்டிகளைப் போல இந்திய அணி அபாரமாக விளையாடி நல்ல ரன் ரேட்டுடன் வெற்றியை சுவைத்தால் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா செல்லும்.

ரன் ரேட் நிலவரம்
குரூப் 2ல் இந்தியா பிளஸ் 1.619 நெட் ரன் ரேட்டுடன் முதலிடம் பிடித்துள்ளது. நியூசிலாந்து பிளஸ் 1.277 ரன் ரேட்டையும், ஆப்கானிஸ்தான், பிளஸ் 1.481 ரன் ரேட்டையும் வைத்துள்ளது. பாகிஸ்தான் என்னதான் 4 போட்டிகளில் வென்றிருந்தாலும் நெட் ரன் ரேட் பிளஸ் 1.065 என்ற அளவில்தான் உள்ளது.

ஆப்கானிஸ்தான் வெற்றி பெற முடியாவிட்டால்
இந்த நிலையில்தான் நேற்று ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பின்போது இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவிடம் நிருபர் ஒருவர், இந்த கேள்வியை முன் வைத்தார். ஒருவேளை நியூசிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் தோற்கடிக்க முடியாவிட்டால் என்ன செய்வீர்கள் என்பதே அந்த கேள்வி. ஹிந்தியில் அந்த கேள்வி முன் வைக்கப்பட்டது. ஒருமுறைக்கு இருமுறை அது என்ன கேள்வி என்ன என்பதை கேட்டு உள்வாங்கினார் ரவீந்திர ஜடேஜா.

மூட்டை முடிச்சு
இதற்கு சற்றும் தாமதிக்காமல் பதிலளித்த ரவீந்திர ஜடேஜா , "அப்புறம் என்ன எங்கள் பேக்குகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போகவேண்டியதுதான், வேறு என்ன பாக்கி இருக்கிறது.." என்று அவர் கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.

உலக கோப்பை நிலவரம்
தற்போதைய நிலவரம் அப்படித்தான் இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற வேண்டும். அப்போதுதான் அது அரையிறுதிப் போட்டிக்கு செல்ல முடியும். அதேநேரம் ஆஸ்திரேலிய அணியை பொருத்தளவில் தென் ஆப்பிரிக்கா தோற்றால்தான் அது அரையிறுதி செல்ல முடியும். இதுதான் புள்ளி பட்டியல் என்பதால், ரவீந்திர ஜடேஜா, இப்படித்தான் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications