சொல்லுங்க மாமா குட்டி.. டிராக்கை மாற்றிய கன்னுகுட்டி! காதலியால் மிருகமான சந்தோஷ்.. ஈரோட்டிலா?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் தான் காதலிக்கும் பெண் மற்றொருவருடன் பழகியதாக சந்தேகம் கொண்ட இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை கத்தியால் பல இடங்களில் கொடூரமாக குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. செல்போன் காதலால் ஏற்பட்ட விபரீதத்தால் போலீசாரே அதிர்ந்து போய் உள்ளனர்.

ஒருதலை காதல் கொலை சம்பவங்களுக்கு எப்போது தான் முடிவு வருமோ தெரியாது. சென்னை சுவாதி தொடங்கி தற்போது ஈரோடு பெண் வரை தொடர்ந்து கொலைகளும் கொலை முயற்சி சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

காதல் என்பது ஒரு அற்புத உணர்வு அதை பிறரிடம் இருந்து பெறுவதை விட பிறருக்கு கொடுத்து பார்ப்பதில் தான் உண்மையான அர்த்தம் இருக்கிறது. ஆனால் காதல் தகராறு கொலைகள் வரைவது தான் தற்போது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

அப்படி ஒரு சம்பவம் தான் ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. தான் காதலித்த பெண் வேறு ஒரு இளைஞரை காதலிப்பதாக சந்தேகம் கொண்ட இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஈரோடு மாவட்டத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. பவானிசாகர் அருகே நஞ்சுண்டப்பன் என்பவர் பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவரது மகனான 32 வயது சந்தோஷ் இரு சக்கர வாகன பழுது நீக்கும் வேலை செய்து வருகிறார்.

 இளம்பெண்

இளம்பெண்

இவருக்கும் பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளம் பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. தற்போது தற்காலிக பணி புரிந்து வரும் அந்த பெண்ணும் சந்தோஷ் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்தப் பெண்ணின் மீது சந்தோஷுக்கு சந்தேகம் முளைக்கத் தொடங்கி இருக்கிறது. அடிக்கடி அவரது செல்போனை வாங்கி பார்ப்பது அந்த பெண்ணுக்கு தெரியாமலேயே அவரை பின்தொடர்வது என சைக்கோ தனங்களை மெல்ல மெல்ல காட்டத் தொடங்கி இருக்கிறார்.

 சைக்கோ காதலன்

சைக்கோ காதலன்

ஒரு கட்டத்தில் சந்தோஷிடமிருந்து அந்த பெண் விலகிச் செல்ல முயன்றிருக்கிறார். ஆனாலும் அவரை விடாமல் சந்தோஷ் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த இளம் பெண் வேறொரு நபரை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக சந்தோஷுக்கு தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக அந்த பெண்ணிடம் கேட்டபோது அவர் மறுத்திருக்கிறார். தொடர்ந்து தொல்லை செய்யவே ஆமாம் உன்னை எனக்கு பிடிக்கவில்லை நான் அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என அந்த பெண் கூறியதால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறார் சந்தோஷ்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

இந்நிலையில் தனது நண்பரான இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் காப்பர் காந்தன் என்பவரை அழைத்துக் கொண்டு அந்தப் பெண் வேலை பார்க்கும் திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்திற்கு சென்றிருக்கிறார் சந்தோஷ். அலுவலகத்தின் வெளியே நின்று கொண்டு அந்தப் பெண்ணின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் வெளியே வா உன்னிடம் பேச வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதை அடுத்து அங்கு வந்த பெண் இதற்காக இங்கெல்லாம் வருகிறீர்கள் நான்தான் உங்களை காதலிக்கவில்லை என்று சொல்லிவிட்டேனே எனக் கூறியிருக்கிறார்.

 கொலை முயற்சி

கொலை முயற்சி

அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சந்தோஷ் தனது பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த இளம் பெண்ணின் தலை முதல் கால் வரை பல இடங்களில் சரமாரியாக குத்தி இருக்கிறார். ரத்த வெள்ளத்தில் சரிந்து அந்தப் பெண் மயங்கி விழுந்தார் இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கைது

கைது

உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த பெண்ணுக்கு தற்போது தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தோஷையும் காப்பர் காந்தனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+