ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்துத்துவா.. "அட்வான்சாக" யோசித்த எடப்பாடி! குறுக்கே புகுந்த பாஜக! எகிறி அடித்த பிரஷர்.. என்னாச்சு?

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் எடப்பாடி ரொம்ப அட்வான்ஸாக யோசிக்கிறார். கண்டிப்பாக அவர் அணி சார்பாக ஒரு அதிமுக வேட்பாளர் நிற்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார், இதை பாஜக எப்படி சமாளிக்கும், தீர்ப்பு எப்படி வரும் என்பதை எல்லாமே பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசுக்கு பதிலாக அதிமுகவே போட்டியிடும் என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். இன்னொரு பக்கம் இங்கே பாஜக போட்டியிடுவதற்கான அறிகுறிகளும் வர தொடங்கி உள்ளன.

இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்னுடைய அணி சார்பாக வேட்பாளரை நிறுத்துவேன். நாங்கள்தான் உண்மையான அதிமுக. என்னால் சின்னம் முடங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சின்னம் முடங்காமல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சியில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. இங்கே வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம். இன்னொரு பக்கம் பாஜக இங்கே போட்டியிடுகிறது என்றால் நாங்கள் விலகிக்கொள்வோம், என்றுள்ளார். இது அதிமுகவில் பெரிய மோதலை ஏற்படுத்தி உள்ளது.

பின்தங்கிய ஓபிஎஸ்.. விவேகமாக முந்தி முதல் வெற்றி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி.. ‛புரட்சி பாரதம்’ ஆதரவு! பின்தங்கிய ஓபிஎஸ்.. விவேகமாக முந்தி முதல் வெற்றி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி.. ‛புரட்சி பாரதம்’ ஆதரவு!

ஈரோடு

ஈரோடு

அதிமுகவில் நடக்கும் இந்த சம்பவங்கள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்கினால் அதனால் பல சிக்கல்கள் ஏற்படும். இதில் இடையில் பொதுக்குழு தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது. பிப்ரவரி 7ம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம். அதற்குள் தீர்ப்பு வருமா என்று தெரியாது. இந்த தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக வந்தால் அவர் தேர்தல் ஆணையத்தில் சென்று சின்னம் தனக்குத்தான் வேண்டும் என்று கூறுவார். அதுவே ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக வந்தால் அவரும் நேரில் போய் சின்னத்தை கேட்பார். சின்னத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

பிரச்சனை

பிரச்சனை

பிரச்சனை இருக்கும் சமயங்களில் சின்னத்தை கொடுக்காமல் இரண்டு பேருக்கும் தற்காலிகமாக சின்னம் ஒதுக்க வாய்ப்பு உள்ளது. இன்னொரு பக்கம் பாஜக போட்டியிடும் பட்சத்தில் இரட்டை இலை சின்னம் இல்லை என்றால் அவர்களுக்கு சாதகமாக நிலைமை மாறுமா? அல்லது வாக்குகள் சிதறுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த தேர்தல் மோதல் காரணமாக எல்லாம் மாறி அதிமுக மோதலுக்கு முடிவு வருமா என்று சொல்ல முடியாது. ஏனென்றால் எடப்பாடி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.

 பாஜக

பாஜக

எடப்பாடி ரொம்ப அட்வான்ஸாக யோசிக்கிறார். கண்டிப்பாக அவர் நிற்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். இதை பாஜக எப்படி சமாளிக்கும், தீர்ப்பு எப்படி வரும் என்பதை எல்லாமே பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். இந்த மோதலை பயன்படுத்தி இரண்டு பேருமே போட்டியிடாதீர்கள். நாங்கள் திமுகவை பார்த்திக்கொள்கிறோம். உங்கள் சின்ன பிரச்சனையையும் சரி செய்கிறோம் என்று பாஜக பிரஷர் கொடுக்குமா என்றும் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். பாஜகவிற்கு தோல்வி அடைந்தால் கூட ஒன்றும் இல்லை.

 பார்க்கலாம்

பார்க்கலாம்

அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் பார்த்துக்கொள்வார்கள். அவர்கள் தங்களின் வலிமையான பிம்பம் உடையும் என்ற கவலை இருக்காது. பாஜகவின் பிம்பத்தை எல்லாம் ஆளுநர் ஏற்கனவே உடைத்துவிட்டார். அதனால் பாஜக அதை பற்றி கவலைப்படாது. பாஜகவின் குறி நாடாளுமன்ற தேர்தல்தான். இப்போது இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் நாங்கள் களத்தில் இருக்கிறோம். நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று பாஜக கட்டிக்கொள்ள முடியும். முக்கியமான பிளேயர் நாங்கள்தான் என்று பாஜக சொல்லும் வாய்ப்புகள் உள்ளன.

நல்ல வாக்குகள்

நல்ல வாக்குகள்

கொஞ்சம் நல்ல வாக்குகள் பெற்றாலே பாருங்கள் இந்துத்துவா வேரூன்றிவிட்டது என்று பாஜக சொல்லிக்கொள்ள முடியும். அந்த இடத்தில் வாய்ப்பு கிடைத்தால் பாஜகவும் கண்டிப்பாக நிற்கும். பாஜகவிற்கு டெல்லி சப்போர்ட், அதிகாரிகள் சப்போர்ட் என்று பல விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஆனால் அதிமுகவிற்கு அப்படி எந்த சாதகமான சூழ்நிலையும் இல்லை. அதிமுக பிரிந்து இருந்தாலும் சரி, சேர்ந்து இருந்தாலும் சரி. பாஜக வெற்றிபெறுவதற்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. அதிமுக மோதல் காரணமாக சின்னம் முடங்கும் வாய்ப்புகளும் உள்ளன. பாஜக இதில் பிரஷர் கொடுக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

 இந்துத்துவா

இந்துத்துவா

எடப்பாடி இதை எப்படி பைட் செய்ய போகிறார் என்று பார்க்க வேண்டும். இரண்டு பேருமே சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டால், இரண்டு பேரையும் ஆதரிக்காமல் நாம் வலிமை பெறலாம் என்று பாஜக நினைக்கிறது. அப்படியே சின்னம் முடங்கினாலும் ஓபிஎஸ் மூலம் தான் சின்னம் முடங்கியது என்று எடப்பாடி வாதம் வைப்பார். ஒற்றுமைக்கு ஏற்றுக்கொள்ளாத எடப்பாடி மூலம்தான் சின்னம் முடங்கியது என்று ஓபிஎஸ் வாதம் வைக்க வாய்ப்பு உள்ளது. எடப்பாடி போட்டியிட முடிவு செய்த போது ஓபிஎஸ் அதை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார். எடப்பாடி இதை எல்லாமே தெரிந்தேதான் ரிஸ்க் எடுக்கிறார். நாங்கள்தான் முக்கியமான கட்சி, நாங்கள்தான் எதிர்க்கட்சி, பாருங்க சின்னத்தை பற்றி கூட கவலைப்படாமல் திமுகவை எதிர்க்கிறோம் என்று எடப்பாடி வாதம் வைக்க சாதகமான சூழ்நிலை ஏற்படும்.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

இன்னொரு பக்கம் ஓபிஎஸ்ஸும் அடித்து ஆடுகிறார். இதில் பாஜக யாருக்கு ஆதரவு தரும் என்பதை பார்க்க வேண்டும். பாஜகவின் முடிவு கவனம் பெறும். எடப்பாடி இன்னொரு பக்கம் பாஜகவை பற்றி எல்லாம் கவலைப்படாமல் ரிஸ்க் எடுக்கிறார். நடப்பதை பார்த்துக்கொள்ளலாம் என்று எடப்பாடி ரிஸ்க் எடுக்கிறார். அது எப்படி செல்கிறது என்று பார்க்கலாம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால் கூட அதிமுக வெல்லுமா என்பது சந்தேகம்தான். ஆட்சிக்கு எதிராக பெரிதாக வெறுப்பு இல்லாத நிலையில், எடப்பாடி சின்னம் கிடைத்தால் கூட வெல்வாரா என்பதெல்லாம் சந்தேகம்தான், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

English summary
BJP smart game, Pressure against Edappadi Palanisamy, OPS plan: What will happen in Erode East By-Election?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X