‘மீசைக்காரர்’ இறங்குறாராமே.. இடைத்தேர்தலில் “இரட்டை இலை” திடீரென பற்றவைத்த வெடி! ஆஹா இதென்ன வியூகம்?
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில், அதிமுக முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் ஒரு பரபரப்பு தகவலைக் கூறியுள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் மீசைக்காரர் நிற்கப்போகிறார், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர் என்கிற ரீதியில் ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா, ஏற்கனவே போட்டியிட்ட தமாகாவுக்கு ஒதுக்குமா? அல்லது பாஜக போட்டியிடக்கூடுமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.
அதிமுக போட்டியிட்டால், இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கிடைக்குமா என்ற சிக்கலும் இருக்கிறது. இந்நிலையில், திமுகவை சமாளிக்க, ஈபிஎஸ்- ஓபிஎஸ் இருவரும் இணைந்து ஒருவரை நிறுத்தப் போவதாகத் தெரிவித்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார் அஸ்பயர் சுவாமிநாதன்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். திருமகன் ஈவெரா மறைவை ஒட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக சட்டப்பேரவை செயலகத்தால் அறிவிக்கப்பட்டது. இதனால் 6 மாதத்திற்குள் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறவுள்ள முதல் சட்டமன்ற இடைத்தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

யார் போட்டி?
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. அதேநேரத்தில், எதிரணியான அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையே நீடித்து வருவதால் இரட்டை இலை சின்னத்திற்கு இருவரும் கையெழுத்திட வேண்டும். எனவே இரட்டை இலை சின்னம் எந்த அணிக்கும் கிடைக்காத நிலை ஏற்படுக்கூடும் என கூறப்படுகிறது.

சிறகடிக்கும் தகவல்
இந்தப் பிரச்சனைகளுக்கு இடம் அளிக்காமல், கூட்டணி கட்சிக்கு அதிமுக வாய்ப்பு கொடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி ஏற்கனவே ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யுவராஜா போட்டியிட்ட தொகுதி என்பதால், அதிமுக கூட்டணியில், அந்தக் கட்சிக்கு மீண்டும் இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே, கொங்கு மண்டலத்தில் தங்கள் பலத்தைச் சோதித்துப் பார்க்க, பாஜக போட்டியிட விரும்புவதாகவும் ஒரு தகவல் சிறகடித்து வருகிறது.

சின்னம் - தாமரை
ஒருவேளை பாஜக போட்டியிட விரும்பினால், அதற்கு அதிமுகவில் நிலவி வரும் சின்ன பிரச்சனை ஒரு முக்கியமான துருப்புச் சீட்டாக இருக்கும். அதிமுகவின் இரு தரப்புக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காத சூழலில், அது வெற்றி வாய்ப்பை பாதிக்கும் எனக் கூறி பாஜக, தாமரை சின்னத்தில் களமிறங்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் அந்தச் சூழலை பாஜக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். பாஜக இதற்காகவே அதிமுக சின்னத்தை முடக்குவதற்கான வேலைகளைப் பார்க்கும் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

எடப்பாடி என்ன முடிவெடுப்பார்
முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே அதிமுக தலைமைப் பதவி யாருக்கு என்ற போட்டியால் கடந்த 6 மாதங்களாக உட்கட்சிப்பூசல் தொடர்ந்து வருகிறது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நிறைவடைந்து தீர்ப்புக்காக காத்திருக்கிறது. இதனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது, எடப்பாடி பழனிசாமி, என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தீவிரமடைந்து வருகிறது.

ஒருமனதாக ஒப்புதல்
இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் ஐடி விங் செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன், ஒரு ட்வீட் போட்டு அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பி விட்டுள்ளார். அவர் தனது ட்வீட்டில், "இருவரும் ஒருமனதாக ஒப்புதல். ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் மீசைக்காரர்..
என்று தகவல். உண்மை தானா? திமுகவை சமாளிக்க இந்த வியூகம் என்று அறிகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

மீசைக்காரர்
ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே இணக்கம் ஏற்பட வாய்ப்பே இல்லாத சூழல் நிலவி வரும் நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரு அணிகளும் இணையப் போவதாக ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமானவரும், அதிமுக முன்னாள் ஐடி விங் நிர்வாகியுமான அஸ்பயர் சுவாமிநாதன் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், இடைத்தேர்தலில், 'இரட்டை இலை சின்னத்தில் மீசைக்காரர்' என பதிவிட்டுள்ளார் சுவாமிநாதன்.

கேசி பழனிசாமி
அஸ்பயர் சுவாமிநாதன் குறிப்பிடும் அந்த மீசைக்காரர் வேறு யாருமல்ல, கேசி பழனிசாமிதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கேசி பழனிசாமி, ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பினரையும் கடுமையாக தாக்கிப் பேசி வருகிறார். அதிமுக தொண்டர்களை ஒன்றிணைத்து விரைவில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த உள்ளதாகக் கூறி வருகிறார். இந்நிலையில் தான் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஒருமனதாக அவரை தேர்தலில் நிறுத்தப்போவதாகச் சொல்லி இருக்கிறார் சுவாமிநாதன். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு சென்னிமலைக்காரர்
கேசி பழனிசாமி, எம்ஜிஆரோடு நெருங்கிப் பழகியவர். ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த கேசிபி, திருச்செங்கோடு தொகுதி எம்.பியாகவும், காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏவாகவும் பணியாற்றியவர். மிக இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்து தனது 23 வயதில் கோவை மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் ஆனவர். 24 வயதிலேயே அதிமுக சார்பில் காங்கேயம் எம்.எல்.ஏவாகி, தமிழ்நாட்டின் சட்டப்பேரவைக்குச் சென்ற மிக இளம் வயது எம்.எல்.ஏ என்ற பெருமையைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேம் ஸ்டார்ட்
இரு தரப்பு மோதல் தொடர்பாக தொடர்ந்து சூசகமாக பதிவுகளை வெளியிட்டு வரும் அதிமுகவின் முன்னாள் ஐடி அணி செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட ட்வீட்டில் "விரைவில் ஒரு ராஜினாமா.. அதன் தொடர்ச்சியாக ஒரு இடைத்தேர்தல்... அதன் தொடர்ச்சியாக இரட்டை இலைக்கு மோதல்... அதன் தொடர்ச்சியாக இரட்டை இலை முடக்கம்... The Game starts..." என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications