வாழை தோட்டத்தில் பியூட்டிஷியன்.. கோபியை கிறுகிறுக்க விட்ட தோப்பு ஓனர் மோகன்.. ஈரோட்டில் அதிர்ச்சி
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபியில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த கொலை சம்பவம், பெரும் அதிர்ச்சியை அம்மாவட்ட மக்களுக்கு தந்துவிட்டது. ஒரு பெண்ணை மோசமாக கொலை செய்து, வாழை தோட்டத்தில் புதைத்துவிட்டு சென்ற நிலையில், அந்த பெண் யார் என்றே போலீசாருக்கு தெரியவில்லை.. இதனால் பல்வேறு கட்ட விசாரணையை போலீசார் துவக்கிய நிலையில், தற்போது இந்த சம்பவம் குறித்த பேரதிர்ச்சி வெளியாகியிருக்கிறது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கெட்டிசெவியூர் என்ற பகுதியில் மோகன் என்பவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது.. அங்கு வாழை, சோளம் போன்றவற்றை பயிரிட்டுள்ளனர். இங்கு காளான் வளர்வதால், அங்குள்ள மக்கள், தங்களது கால்நடை தீவனங்களுக்காக இந்த வாழை தோட்டத்துக்கு வந்து செல்வது வாடிக்கையாகும்.

3 அடி ஆழம்
அந்தவகையில் 2 நாட்களுக்கு முன்பு முருகேசன் என்பவர், மோகனின் வாழைத்தோப்பிற்கு வந்தபோது, அந்த பகுதி முழுவதுமே ரத்த துளிகள் காணப்பட்டன. பிறகு தோட்டத்தில் குழிதோண்டி மூடப்பட்டதற்கான அடையாளம் இருந்ததால் தோட்ட உரிமையாளர் மோகனுக்கு தகவல் தந்தார்..
தோட்ட உரிமையாளர் மோகனும் சிறுவலூர் போலீஸ், நம்பியூர் தாசில்தார், பெருந்துறை அரசு மருத்துவர் நந்தகுமாருடன் வாழைத் தோட்டத்துக்கு விரைந்து வந்தார். அப்போது தோண்டப்பட்ட குழியில் சுமார் 3 அடி ஆழத்தில் உட்கார்ந்த நிலையில் பெண்ணின் சடலம் நிர்வாணமாக இருந்ததை கண்டு அதிர்ந்தனர்.

வாழை தோட்டத்தில் நிர்வாண சடலம்
30 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணை தலையில் கல்லால் அடித்தும், சிறு கத்தியால் கழுத்தை குத்தியும் கொன்று குழிதோண்டி புதைத்திருப்பது தெரியவந்தது. சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் கத்தி, அரிவாள் விழுந்து கிடந்தன..
ஆனால், அந்த பெண் யார் என்று அடையாளம் தெரியாததால், அந்த பகுதியிலுள்ள செல்போன் சிக்னல், வாகனங்களின் பதிவு எண்களை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது.. பிறகு இறந்த பெண் யார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
அதாவது, கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சோனியா.. 35 வயதாகிறது.. அந்தியூர் அருகே பிரம்மதேசத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி ஆவார்.. இந்த தம்பதிக்கு பிளஸ் 2 படிக்கும் மகளும், 10ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.

ஈரோடு பியூட்டிஷியன்
ஈரோடு திண்டலில் உள்ள பியூட்டி பார்லரில் பியூட்டிஷியனாக சோனியா வேலை பார்த்து வந்துள்ளார். கணவர் ராஜேந்திரன், 2 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டதால், தன்னுடைய தாய் ராஜாமணியுடன் ஆப்பக்கூடலில் வசித்து வருபவர் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
பிறகு சோனியாவின் செல்போன் சிக்னலை போலீசார் சோதனை செய்தபோது, வாழை தோட்ட ஓனர் மோகனுடன் சோனியா பலமுறை பேசியிருப்பது உறுதியானது. இதனால் மோகனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மோகனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின..
கள்ளக்காதல் - திருமணம்
2 வருடங்களுக்கு முன்பு புதுக்கரைபுதூரில் தனியார் கார்மென்ட்ஸில் மோகன் வேலை பார்த்தபோது, சோனியாவும் அதே கம்பெனியில் வேலை பார்த்துள்ளார்.. அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவில் முடிந்துள்ளது.
மோகனுக்கும் திருமணமாகிவிட்டது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் 2 மாதங்களுக்கு முன்பு, மோகனைவிட்டு, அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.. எனவே தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சோனியா மோகனை கட்டாயப்படுத்தி வந்தாராம்.
வெட்டப்பட்ட குழி
சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு வாழை தோட்டத்திற்கு சோனியாவை வரவழைத்துள்ளார் மோகன்.. அப்போது மீண்டும் கல்யாண பேச்சை சோனியா எடுத்துள்ளார்..
அதுமட்டுமல்லாமல், தன்னை திருமணம் செய்யாவிட்டால், அனைவரிடமும் இந்த உறவு பற்றி சொல்லிவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மோகன், கீழே கிடந்த கல்லால் சோனியாவை தாக்கியும், கழுத்தில் கத்தியால் குத்தியும் கொன்றுள்ளார். பிறகு தோட்டத்தில் வேறு எதற்காகவோ வெட்டப்பட்டிருந்த குழியில் சோனியாவை தள்ளி புதைத்துள்ளார்.
ஆடைகளை களைந்து
பிறகு சோனியாவின் ஆடைகளை களைந்துள்ளார்.. செல்போனையும் பறித்துள்ளார்.. அவைகளை கீழ்பவானி வாய்க்காலில் வீசிவிட்டு சென்றுள்ளார்.. இவ்வளவு விஷயங்களையும் கேஷூவலாக பதற்றமே இல்லாமல் போலீசாரிடம் வாக்குமூலமாக சொன்னாராம் மோகன்.
ஆனால், கொலை செய்த கத்தியை மட்டும் அங்கேயே போட்டுவிட்டு போயிருக்கிறார் மோகன்.. மேலும், தோட்டத்தில் சிதறி கிடந்த ரத்த துளிகள் மோகனை தற்போது காட்டி தந்துவிட்டது. தற்போது மோகன் கைதாகி சிறையில் உள்ளார்.












Click it and Unblock the Notifications