ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"லெப்ட் ஹேண்டில்" டீல் செய்த அண்ணாமலை.. சாது மிரண்டால்.. ஓபிஎஸ் போட்ட போடு.. ஓ இதுதான் பின்னணியா?

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மிகப்பெரிய செக் வைத்துவிட்டார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்னுடைய அணி சார்பாக வேட்பாளரை நிறுத்துவேன். நாங்கள்தான் உண்மையான அதிமுக. என்னால் சின்னம் முடங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

சின்னம் முடங்காமல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சியில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. இங்கே வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம். இன்னொரு பக்கம் பாஜக இங்கே போட்டியிடுகிறது என்றால் நாங்கள் விலகிக்கொள்வோம், என்றுள்ளார். இது அதிமுகவில் பெரிய மோதலை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஈவிகேஎஸ் இளங்கோவனை ஸ்டிராங்காக திமுக பரிந்துரைக்க இதுதான் காரணம்!ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஈவிகேஎஸ் இளங்கோவனை ஸ்டிராங்காக திமுக பரிந்துரைக்க இதுதான் காரணம்!

பேட்டி

பேட்டி

ஓ பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூபிற்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இவ்வளவு சுவாரசியமாக ஆகும் என்று நான் எதிர்பார்த்தேன். இந்த தேர்தலை ஏன் உடனே அறிவித்தார்கள் என்று புரிய வேண்டியவர்களுக்கு புரியும். எடப்பாடி - தமிழ் மாநில காங்கிரஸ் இடையே என்ன பேச்சுவார்த்தை நடந்தது என்று தெரியவில்லை. எடப்பாடி சூழ்நிலைக்கு தகுந்தபடி முடிவு எடுக்க கூடியவர். பெரும்பாலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இடத்தை கொடுக்கவே எடப்பாடி நினைத்து இருப்பார். ஏனென்றால் பல்வேறு இடைத்தேர்தல்களில் அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது. இப்போது ஈரோடு கிழக்கில் நின்றால் சிக்கிவிடுவோம் என்றுதான் எடப்பாடி நினைத்து இருப்பார். வாசன் கிட்ட கொடுத்துவிடலாம் என்றுதான் எடப்பாடி நினைத்து இருப்பார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

ஆனால் வாசன் உஷாராக முடிவு எடுத்து அந்த தொகுதியில் நிற்க வேண்டாம் என்ற முடிவு எடுத்துள்ளார். இந்த நிலையில் வேறு வழியில்லை என்பதால் எடப்பாடி உறுதியாக முடிவு எடுத்துள்ளார். வலிமையான முகத்தை காட்ட வேண்டும் என்று எடப்பாடி நினைத்து இந்த முடிவை எடுத்துள்ளார். ஆனால் அதிமுகவை பாஜக எப்படி டீல் செய்துள்ளது பார்த்தீர்களா? அதிமுக தலைவர்களை அண்ணாமலை வாசலில் காக்க வைத்துள்ளார். மோடிதான் இவர்களை லெப்ட் ஹேண்டில் டீல் செய்துள்ளார் என்றால் அண்ணாமலையும் இவர்களை லெப்ட் ஹேண்டில் டீல் செய்துள்ளார் பாருங்கள்.

உஷார்

உஷார்

5 ஆயிரம் வாக்குகள்தான் பாஜகவிற்கு இருக்கு என்று நக்கல் அடித்தவர்கள் எல்லாம் இப்போது பாஜக ஆபிஸ் வாசலில் போய் நிற்கிறார்கள். அப்போது பாஜக வேண்டும் என்று தானே எடப்பாடி நினைக்கிறார்? பாஜக சப்போர்ட் ஓ பன்னீர்செல்வத்திற்கு செல்ல கூடாது என்று தானே எடப்பாடி நினைக்கிறார். வீராதி வீரர் போல பேசிய ஜெயக்குமார், கேபி முனுசாமி இப்போது பாஜக வாசலில் போய் நிற்கவில்லையா?சி வி சண்முகம் மட்டும்தான் இந்த கூட்டத்திற்கு போகவில்லை. பரவாயில்லை. மானஸ்தன் சிவி சண்முகம். போல்ட்டான முடிவு எடுத்துள்ளார்.

அண்ணாமலை

அண்ணாமலை

எடப்பாடிக்கு ஈரோடு கிழக்கில் செக் வைத்துள்ளார் ஓ பன்னீர்செல்வம். பாஜகவிற்கு மட்டுமல்ல அதிமுக கூட்டணியில் உள்ள எல்லோருக்கும் ஓ பன்னீர்செல்வமின் முடிவு முக்கியத்துவம் தர கூடிய ஒன்று. பாஜகவிற்கு ஆதரவு தருவேன் என்று ஓ பன்னீர்செல்வம் சொல்வதன் மூலம் எடப்பாடிக்கு ஓ பன்னீர்செல்வம் பிரஷர் போட்டுள்ளார். பன்னீர்செல்வமின் மூவ் காரணமாக அதிமுக கூட்டணி கட்சிகள் அனைத்தையும் ஓ பன்னீர்செல்வம் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஓ பன்னீர்செல்வம் இப்படி செய்வார் என்று எடப்பாடி கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார்.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

எல்லோரும் ஓபிஎஸ் ஓடிவிடுவார். நிற்க மாட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். இது பைட். இதை விட்டால் ஓபிஎஸ் விவசாயம்தான் பார்க்க வேண்டும். அவர் கண்டிப்பாக இந்த தேர்தலில் சண்டை போடுவார். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று கூறினோம். நாங்கள் சொன்னது போலவே நடந்து உள்ளது. இப்போது வேட்பாளரை களமிறக்குவோம் என்று ஓபிஎஸ் கூறி உள்ளார். இதை எதிர்பார்க்காத எடப்பாடி அணி தற்போது பாஜக அலுவலகத்திற்கு சென்றுள்ளது. ஓபிஎஸ் வைத்த செக் காரணமாக வேறு வழியின்றி எடப்பாடி இப்படி செய்துள்ளார், என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

English summary
O Panneerselvam using different tactics against Edappadi Palanisamy ahead of Erode East By-Election says Raveendran Duraisamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X