ஈரோடு டூ திருச்சி ரயில்.. 2 ஆண்டுக்கு பின் மீண்டும் பயணம்.. பயணிகள் மகிழ்ச்சி!
ஈரோடு: கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு- திருச்சி இடையே பயணிகள் ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டது.
ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஈரோட்டில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் ரயில் 12 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் சென்றடையும். இதேபோல் மாலை 4.35 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் ரயில் இரவு 8.45 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் சென்றடைந்தது.

இதேபோல் திருச்சியில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்படும் ரயில் 11.10 மணிக்கு ஈரோடு ரயில் நிலையம் வந்து அடைந்தது. இதேபோல் மாலை 4.35 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் ரயில் 8.25 மணிக்கு ஈரோடு ரயில் நிலையம் வந்தடையும். இதுபோல் ஒரு நாளில் 2 முறை ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்கள் என ஏராளமானோரின் முக்கிய போக்குவரத்து வழியாக இருந்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலால் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரயில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக ரயிலை பயன்படுத்தி வந்த பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால், ஈரோடு-திருச்சி, திருச்சி- ஈரோடு பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என பயணிகள், அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் சார்பில் ரயில்வே நிர்வாகத்திற்கு தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம், ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பை பொதுமக்களும், ரயில் பயணிகளும், வரவேற்றுள்ளனர். மேலும் பயணிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று ரயிலை இயக்க உத்தரவிட்ட தெற்கு ரயில்வேக்கும், ரயில்வே சேலம் கோட்டத்திற்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் பொதுமக்கள், ரயில் பயணிகள் நன்றி தெரிவித்தனர். இதுபோல் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டுள்ள ரெயில்களையும் இயக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 8.10 மணிக்கு ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் புறப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பயணிகளுக்கு ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கினர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications