தென்னரசுவை சொந்த வார்டிலேயே வீழ்த்த உதவிய வியூகம்! ஸ்டாலினிடம் சபாஷ் வாங்கிய திமுக மாவட்டச்செயலாளர்!
தென்னரசுவை சொந்த வார்டிலேயே வீழ்த்திய திமுக மாவட்டச் செயலாளரின் களப்பணி.
ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை அவரது சொந்த வார்டிலேயே வீழ்த்தியதன் மூலம் அங்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டிருந்த நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார் ஸ்டாலினிடம் சபாஷ் வாங்கியிருக்கிறார்.
தென்னரசுவின் சொந்த வார்டில் மொத்தம் 763 வாக்குகள் பதிவான நிலையில் பாகம் 124ல் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் 463 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளரோ வெறும் 192 ஓட்டுக்களை மட்டுமே வாங்கியிருந்தார்.
ராஜேஷ்குமார் எம்.பி. தலைமையிலான டீம் காலை மாலை என இரண்டு வேளைகள் மட்டுமல்லாமல் பகல் நேரங்களில் செய்த தீவிர பிரச்சாரமும் வியூகமும் ஒர்க் அவுட் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி அமைச்சர்கள் , 19 மாவட்டச் செயலாளர்கள் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை களமிறக்கி இருந்தது திமுக தலைமை. ஈரோட்டில் கடந்த ஒரு மாதமாக முகாமிட்டு தேர்தல் பணியாற்றிய அவர்கள் ஒவ்வொருவருக்கும் அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் கே.என்.நேருவால் ஒவ்வொரு பகுதிகள் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருந்தன. அவரவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் மட்டும் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் தேர்தல் பணியாற்றினால் போதும் என்ற நிலை இருந்தது.

நாமக்கல் கிழக்கு மாவட்டம்
அந்த வகையில் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார் எம்.பி.க்கு அதிமுக வேட்பாளர் தென்னரசுவின் சொந்த வார்டு ஒதுக்கப்பட்டிருந்தது. மற்ற வார்டுகளில் எப்படியோ தென்னரசுவின் சொந்த வார்டு திமுகவுக்கு சற்று டஃப்பாகவே இருந்து வந்தது. இந்நிலையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை மொத்தமாக களமிறக்கிய ராஜேஷ்குமார் ஒவ்வொரு வீட்டுக்கும் நாளொன்றுக்கு மூன்று முறை நிர்வாகிகளை நேரில் அனுப்பி ஓட்டுக் கேட்க வைத்தார்.

தலைமை பாராட்டு
இதனிடையே நம்ம வார்டுதானே நமக்கு தான் ஓட்டுப்போடுவார்கள் எனக் கருதிய தென்னரசு, பிரச்சாரத்தில் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்ததால் மொத்த வாக்குகளையும் காங்கிரஸ் வேட்பாளர் பக்கம் திருப்பிவிட்டார் ராஜேஷ்குமார். இந்நிலையில் இன்று பிற்பகல் முதல் இந்த விவகாரம் பெரியளவில் தொலைக்காட்சிகளில் பிளாஷ் ஆனதால் தென்னரசுவின் சொந்த வார்டில் தேர்தல் பணியாற்றிய திமுக நிர்வாகிகளுக்கு தலைமையிடம் இருந்து பாராட்டு வந்திருக்கிறது.

எந்தெந்த வார்டு
ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்தெந்த பூத்களில் காங்கிரஸை விட அதிமுக அதிக வாக்குகள் பெற்றிருந்தது என்ற விவரத்தை அண்ணா அறிவாலயத்துக்கு அனுப்பும் பணியில் அமைச்சர் முத்துசாமி ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications