இது மட்டும் மாறலயே.. விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் தடுப்புகளை தாண்டிக் குதிக்கும் தவெக தொண்டர்கள்!
ஈரோடு: ஈரோட்டில் இன்று நடைபெறும் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் தொண்டர்கள் நிற்க ஒவ்வொரு பிரிவாக தடுக்கப்பட்டுள்ளதால் ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு செல்ல சில தவெக தொண்டர்கள் அத்துமிறி தடுப்புகளை தாண்டி குதித்து வருகின்றனர்.
கரூர் துயரச் சம்பவத்திற்கு பிறகு, முதன்முறையாக புதுச்சேரியில் கடந்த வாரம் பொதுவெளியில் மக்கள் சந்திப்பு பரப்புரையை தொடங்கினார் தவெக தலைவர் விஜய். இதன் தொடர்ச்சியாக, இன்று (டிசம்பர் 18) ஈரோட்டில் திறந்தவெளியில் விஜய் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள சரளை என்ற பகுதியில் 16 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டில் அவருடைய ஏற்பாட்டில் தான் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. கூட்டத்தின் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க, விஜய் பிரச்சாரம் செய்யக்கூடிய இடத்தில் 72 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுகளிலும் 400 நபர்கள் நின்று விஜய் பிரச்சார வாகனத்திலிருந்து பேசுவதை பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பொதுகூட்ட மேடையை சுற்றியும் தவெக கொடிக் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. மைதானத்தில் விஜய்யின் பரப்புரை வாகனத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையே 50 மீட்டர் இடைவெளியுடன், 4 தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விஜய் பரப்புரைக்காக 1797 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஈரோட்டில் பிரச்சாரக் கூடத்திற்காக காலை 9 மணியளவில் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து விஜய் புறப்பட்டார். அங்கிருந்து சென்னை விமான நிலையம் செல்லும் அவர், தனி விமானம் மூலம் கோயம்புத்தூர் வரை பயணித்து, பிறகு சாலை மார்க்கமாக பிரச்சாரம் நடைபெறவுள்ள மைதானத்திற்கு காரில் செல்கிறார்.
இதனிடையே, காலை முதலே பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் இடத்தில் தவெக தொண்டர்களும், பொதுமக்களும் குவியத் தொடங்கி விட்டனர். கர்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டோர் பொதுக்கூட்டத்திற்கு வரவேண்டாம் என அக்கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தவெக பரப்புரை கூட்டத்தில் தடுப்புகளை தாண்டி குதித்து வருகின்றனர் தவெக தொண்டர்கள். ஒவ்வொரு பிரிவாக தடுக்கப்பட்டுள்ளதால் ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு செல்ல சில தவெக தொண்டர்கள் அத்துமிறி தடுப்புகளை தாண்டி குதித்து வருகின்றனர்.
விஜய் நடத்தும் மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் ரசிகர்கள் அத்துமீறி தடுப்புகளை தாண்டுவதும், கம்பங்கள், மரங்களில் ஏறுவதும் தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. தவெக தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என தவெக தலைமையும் தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
காணொலி விசாரணைக்கு நோ சொன்ன நீதிமன்றம்! முதல்வர் விஜய்-சங்கீதா நேரில் ஆஜராகனும்! விசாரணை ஒத்திவைப்பு -
எந்த முதல்வரும் செய்யாத மூவ்.. உள்ளாட்சித் துறையை முதல்வர் விஜய் தன்வசம் வைத்திருப்பது ஏன்? பின்னணி -
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்? -
விஜய்யின் அரசியல் எப்படி இருக்கு? ஒரு வார்த்தையில் ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன லதா.. இப்படி சொல்லிட்டாங்களே? -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
அந்த குழந்தையே நீங்க தான் சார்.. தவெக கூட்டணி.. துரை வைகோ கொடுத்த ஹின்ட் -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி












Click it and Unblock the Notifications