கிச்சனில் சமைத்து கொண்டிருந்த பெண்.. உள்ளே சென்ற மாமனார்.. அரிவாளால் ஒரே போடு.. அலறிய திருப்பத்தூர்
மருமகளை மாமனார் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்
திருப்பத்தூர்: மருமகளை கழுத்து அறுத்து கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர்.. இதுகுறித்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை கிளப்பிவிட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்துள்ளது ஜங்களாபுரம்.. இங்கு வசித்து வருபவர் மணி... இவரது மகன் சிவா.. 40 வயதாகிறது..
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்... இவரது மனைவி பெயர் முருகம்மாள்.. 36 வயதாகிறது.. இவர் ஒரு டீச்சர்.. கலர்பதி பகுதியில் அரசு துவக்கப் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.

2 பிள்ளைகள்
இந்த தம்பதிக்கு மதுனிஷா என்ற 11 வயதில் ஒரு மகளும், ரோகித் என்று 8 வயதில் மகனும் இருக்கிறார்கள்.. எனினும் தம்பதி இருவருக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன.. இதனால் 3 வருடத்துக்கு முன்பு விவாகரத்து கேட்டு கோர்ட்டில்கூட கேஸ் போட்டுள்ளனர்.. அதனால் 3 வருடமாகவே கணவனை பிரிந்துவிட்டார்.. இப்போதைக்கு தன்னுடைய அப்பா வீட்டில் தங்கியுள்ளார் முருகம்மாள்.

ஆத்திரம்
இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவன் வீட்டிற்கு வந்துள்ளார் முருகம்மாள்.. அப்போது வீட்டில் மாமனார் மணி இருந்துள்ளார்.. அவரிடம், இந்த வீடு தனக்கு சொந்தம் என்றும், வீட்டைவிட்டு வெளியேறுமாறு சொன்னதாகவும் தெரிகிறது.. இதுவே மருமகள் - மாமனார் இடையே தகராறாகவும் உருவெடுத்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மாமனார், முருகம்மாள் கிச்சனில் இருக்கும் பொழுது, கத்தியால் மருமகளின் கழுத்தை வெட்டிவிட்டார்..

சரண்
இதனால் நிலைகுலைந்த முருகம்மாள் ரத்த வெள்ளத்தில் கிச்சனிலேயே விழுந்து இறந்துவிட்டார்.. முருகம்மாளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.. ஆனால், அதற்குள் மானார் மணி நாட்றம்பள்ளி போலீசாரிடம் மருமகளை வெட்டி கொலை செய்ததாக சொல்லி சரணடைந்துள்ளார்...

கைது
இப்போது மணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.. முருகம்மாள் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்... மருமகளை மாமனார் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications