For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்து மதத்துக்கு மாறிய முன்னாள் வஃபு வாரிய தலைவர்: பெயரையும் மாற்றினார்

Google Oneindia Tamil News

உத்தரபிரதேசத்தில் ஷியா வஃக்பு வாரிய முன்னாள் தலைவர் ஒருவர் சனாதன தர்மத்தை ஏற்று இந்து மதத்திற்கு மாறியுள்ளார். தனது பெயரையும் அவர் மாற்றிக்கொண்டுள்ளார்.

மணப்பாறையில் மேக வெடிப்பு போன்றதொரு மழை.. 3 மணி நேரத்திற்கு நகராத மேகங்கள்.. வெதர்மேன் போஸ்ட் மணப்பாறையில் மேக வெடிப்பு போன்றதொரு மழை.. 3 மணி நேரத்திற்கு நகராத மேகங்கள்.. வெதர்மேன் போஸ்ட்

 மதமாற்ற உரிமை

மதமாற்ற உரிமை

மதமாற்றம் என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை சார்ந்தது என அரசியல் அமைப்புச் சட்டம் சொல்கிறது. இந்து மதத்தை பிடிக்கவில்லை என அம்பேத்கர் பௌத்த மதத்தை தழுவினார். மதமாற்றம் இந்தியாவில் சாதாரணமாக நடக்கும் ஒரு நிகழ்வு. முஸ்லீம், கிருத்துவர்களாக ஆண்டுக்கணக்கில் மதமாற்றம் நடக்கிறது. ஆனாலும் மக்கள் வேற்றுமையில் ஒற்றுமையாக மதசகிப்புடன் வாழ்வதை நடைமுறையில் காண்கிறோம்.

தாய் மதம் திரும்பும் இயக்கம்

தாய் மதம் திரும்பும் இயக்கம்

தாய்மதம் திரும்பும் இயக்கமும் சில இந்து அமைப்புகளால் இந்தியா முழுவதும் இயக்கமாக நடக்கிறது. இதில் கிருத்துவ, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களை மீண்டும் தாய்மதத்துக்கு திரும்ப அழைப்பது என இயக்கமாக நடத்துகின்றனர். இதில் சில இடங்களில் தாய் மதத்துக்கு திரும்பு நிகழ்வுகளும் நடக்கிறது.

முன்னாள் ஷியா வஃக்பு வாரிய தலைவர்

முன்னாள் ஷியா வஃக்பு வாரிய தலைவர்

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் முன்னாள் ஷியா வஃக்பு வாரிய தலைவர் ஒருவர் இஸ்லாமிய மதத்திலிருந்து விலகி இந்து சனாதன தர்மத்தை ஏற்றுள்ளார். அவரது பெயரையும் மாற்றிக்கொண்டுள்ளார்.

வாசிம் ரிஸ்வி என்கிற தனது பெயரை ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி என்று பெயர் மாற்றிக்கொண்டார். ஷியா வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவரான வாசிம் ரிஸ்வி நேற்று காஜியாபாத்தில் உள்ள தஸ்னா கோவிலில் நடந்த மத விழாவில் சனாதன் தர்மத்திற்கு மாறினார்.

இந்து சனாதன தர்மத்தை ஏற்றதாக அறிவிப்பு

இந்து சனாதன தர்மத்தை ஏற்றதாக அறிவிப்பு

இந்த சடங்குகளை புகழ்பெற்ற ஜூனா அகடாவின் மஹாமண்டலேஷ்வர் என்று அழைக்கப்படும் மதகுரு யதி நரசிங்கானந்த் சரஸ்வதி நடத்தி வைத்தார். மதமாற்ற விழாவுக்குப் பிறகு, வாசிம் ரிஸ்வி தனது பெயரை ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி என்று பெயர் மாற்றியுள்ளார்.

எந்த மதத்தை பின்பற்றுவது என்பது அவரவர் விருப்பம் என்று தெரிவித்த தியாகி "நான் இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன். என் தலைக்கு பரிசுத் தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனவே, நான் உலகின் பழமையான மதத்தைத் தழுவுகிறேன்" என்று இந்து மதத்துக்கு மாறியது குறித்து தெரிவித்துள்ளார்.

குரான் வசனங்களை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்

முன்னாள் வக்ஃப் தலைவரான அவர், குரானில் இருந்து 26 வசனங்களை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பரபரப்பாக செய்திகளில் இடம் பிடித்தவர். அவரது கோரிக்கையை இஸ்லாமிய மதகுருமார்கள் நிராகரித்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கில் அவரது மனுவை தள்ளுபடி செய்து அவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது. அவரது மனுவை "முற்றிலும் பொறுப்பற்றதனமானது" என்று குறிப்பிட்டிருந்தது.

முகமது நபி குறித்த புத்தகம்

முகமது நபி குறித்த புத்தகம்

அதன் பின்னர், அவர் முகமது நபியைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதினார், அது சர்ச்சையானது, அதனால் மதகுருக்களின் கோபத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு தியாகி ஆளானார். அப்போதிருந்து, தியாகி தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறினார். தியாகி நவம்பர் மாதம் தம்மை அணுகியதாகவும், மரணத்திற்குப் பிறகு அவரது உடலை தகனம் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்ததாக நரசிங்கானந்த சரஸ்வதி என்பவர் தெரிவித்துள்ளார்.

English summary
Former Waqf Board Chairman Converts to Hinduism: Also changed name
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X