கோவா முதல்வர் பதவியேற்பு LIVE: கோவா மாநில முதல்வராக பதவியற்றார் பிரமோத் சாவந்த்
கோவா மாநில முதல்வராக 2வது முறையாக இன்று பிரமோத் சாவந்த் பதவியேற்றார். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் பி.எஸ் ஸ்ரீதரன்பிள்ளை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நடந்து முடிந்து கோவா தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் பிரமோத் சாவந்த் நாளைய தினம் 2ஆவது முறையாக முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.
காலை 11 மணிக்கு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பதவியேற்பு விழாவில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவா மாநிலத்தில் முதல்வர் தவிர மொத்தம் 11 பேர் அமைச்சராகப் பதவியேற்கலாம் என்ற நிலையில், இதுவரை அமைச்சரவை குறித்த தகவல்கள் பாஜக தரப்பில் இருந்து வெளியாகவில்லை.
கோவா மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 40 அதில் 20 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. தனிப்பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாக வென்ற நிலையில், சுயேச்சை மற்றும் எம்ஜிபி கட்சியின் ஆதரவுடன் பாஜக அங்கு ஆட்சியை அமைக்கிறது.














Click it and Unblock the Notifications