For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் சட்டசபை தேர்தல் LIVE : குஜராத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

Google Oneindia Tamil News

காந்திநகர்: இன்று காலை தொடங்கிய குஜராத் சட்டசபைக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் சட்டசபை தேர்தலில் களம் கண்டுள்ளது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த ஒன்றாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.

Gujarat assembly election 2022 phase 2 voting live updates and highlights in Tamil

Newest First Oldest First
6:03 PM, 5 Dec

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைத்து எடுத்துச் சென்ற தேர்தல் அதிகாரிகள்.
5:50 PM, 5 Dec

குஜராத் தேர்தலில் மாலை 5 மணி வரை 58.68% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்
4:47 PM, 5 Dec

குஜராத் சட்டசபை தேர்தலில் மாலையிலும் ஆர்வத்துடன் வாக்களிக்கும் பொதுமக்கள்
4:25 PM, 5 Dec

குஜராத் தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை 50.51% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
4:05 PM, 5 Dec

குஜராத் தேர்தலில் வாக்களிக்கப் பிரதமர் மோடி பேரணியாகச் சென்றது விதிமீறல்; இதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க உள்ளோம்- காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா
3:40 PM, 5 Dec

குஜராத் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கே பெருந்திரளாக வாக்களிக்கின்றனர்.. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி- காங்கிரஸ் வேட்பாளர் பானுபிரதாப்பூர்
3:10 PM, 5 Dec

குஜராத் சட்டசபை தேர்தலில் நாடியாத் தொகுதியில் வாக்களித்த மாற்றுத் திறனாளி. 20 ஆண்டுகளுக்கு முன்பு இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி அங்கித் சோனி, குஜராத் தேர்தலில் வாக்களித்தார்.
2:38 PM, 5 Dec

குஜராத் அன்க்லாவ் சட்டசபை தொகுதியில் உள்ள கேசவ்புரா வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே கைகலப்பு; போலீசார் விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்
2:20 PM, 5 Dec

குஜராத் தேர்தல்- பகல் 1 மணி நிலவரப்படி மாவட்ட வாரியாக சபர்கந்தாவில் 39 சதவீதம் வாக்குகள் பதிவு
2:09 PM, 5 Dec

உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் குஜராத் தேர்தலில் அகமதாபாத்தில் வாக்களித்தார்
1:51 PM, 5 Dec

குஜராத் சட்டசபை தேர்தல் பகல் 1 மணி வரை 34.74 சதவீத வாக்குகள் பதிவு- தேர்தல் ஆணையம். குஜராத் சட்டசபைக்கு இறுதி கட்ட வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. 93 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு
1:34 PM, 5 Dec

குஜராத் சட்டசபை தேர்தல் காலை 11 மணி வரை 19.06 சதவீத வாக்குகள் பதிவு
1:34 PM, 5 Dec

குஜராத் சட்டசபைக்கு இறுதி கட்ட வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது
1:33 PM, 5 Dec

93 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு
1:31 PM, 5 Dec

2014க்கு பிறகு மத்திய அரசு செய்த பணிகளை மக்களால் புறக்கணிக்க முடியாது. பிரதமர் மோடி நாட்டுக்காக நிறைய உழைக்கிறார்.. அவரை கொஞ்சம் ஓய்வெடுக்கும்படி கேட்டேன்- பிரதமர் மோடியின் சகோதரர் சோமாபாய் மோடி
1:19 PM, 5 Dec

குஜராத் சட்டசபை தேர்தலில் வதோதராவில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நயன் மோங்கியா தனது வாக்கை பதிவு செய்தார்.
12:54 PM, 5 Dec

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி குஜராத் தேர்தலில் காந்திநகரில் வாக்களித்தார். 100 வயதான ஹீராபென் மோடி வீல் சேரில் வந்து தனது ஜனநாயக கடைமையை ஆற்றினார்.
12:37 PM, 5 Dec

இந்த முறை குஜராத்தில் பாஜக குறைந்தது 150 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறும் - பாஜக இளம் தலைவர் ஹர்திக் படேல் நம்பிக்கை
12:26 PM, 5 Dec

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள், இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வேண்டும் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
12:17 PM, 5 Dec

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் சோமாபாய் மோடி, குஜராத் ராணிப்பில் உள்ள நிஷான் பப்ளிக் பள்ளியில் வாக்களித்தார்.
12:16 PM, 5 Dec

குஜராத் சட்டசபை தேர்தலில் முதல்வர் பூபேந்திர படேல் வாக்களித்தார்.. இந்தத் தேர்தலில் பாஜக தனது பழைய சாதனைகளை முறியடித்து மாபெரும் வெற்றி பெறும் என பூபேந்திர படேல் நம்பிக்கை
11:49 AM, 5 Dec

குஜராத்தில் இன்று நடைபெறும் 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் காலை 11 மணி வரை 19.17% வாக்குகள் பதிவாகியுள்ளன.
11:37 AM, 5 Dec

ஓபிசி வாக்காளர்கள் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கே வாக்களிப்பார்கள்.. ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி- முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா
11:24 AM, 5 Dec

குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது குடும்பத்தினருடன் அகமதாபாத்தில் உள்ள கோவிலில் பிரார்த்தனை.
11:11 AM, 5 Dec

அமித் ஷா மகனும் பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா அகமதாபாத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார்
11:04 AM, 5 Dec

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது குடும்பத்தினருடன் அகமதாபாத்தின் நாரன்புரா தொகுதியில் வாக்களித்தார்.
10:56 AM, 5 Dec

மத்திய குஜராத், வடக்கு குஜராத் பகுதிகளில் காங்கிரஸுக்கே அதிகப்படியான வாக்குகள் கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன். 27 ஆண்டுகால பாஜக ஆட்சி முடிவுக்கு வருவது உறுதி -முன்னாள் குஜராத் முதல்வர் சங்கர்சிங் வகேலா
10:41 AM, 5 Dec

குஜராத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 4.75 சதவீத வாக்குகள் பதிவானது.. அதிகபட்சமாக காந்திநகரில் 7 சதவீத வாக்குகள் பதிவு..
10:33 AM, 5 Dec

பாஜக வேட்பாளர் ஹர்திக் படேல் சந்திராநகர் தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.
10:20 AM, 5 Dec

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவும் அவரது மனைவியும் இன்று அகமதாபாத்தில் வாக்களித்தனர்.
READ MORE

English summary
In the first phase of the Gujarat assembly elections, voting was held in 89 constituencies on the 1st, while the second and final phase of voting in the remaining 93 constituencies will take place today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X