குஜராத்தில் மாறிய களம்.. காங்கிரசுக்கு ஓவைசி கட்சி வேட்பாளர் ஆதரவு.. மனு வாபஸ்.. பாஜகவுக்கு ‛செக்’
காந்தி நகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்கும் வகையில் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஏ கட்சி வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் வாங்கி பாஜகவுக்கு செக் வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
டிசம்பர் 1ல் 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடக்கிறது. 2வது கட்டமாக டிசம்பர் 5ல் 93 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

மும்முனை போட்டி
இவ்வாறாக குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 8 ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குஜராத் தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் கூட்டணி இன்றி 182 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

ஓவைசி கட்சி போட்டி
இதுதவிர இன்னும் சில கட்சிகள் தங்களுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டுள்ளன. இதில் ஒன்று தான் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியாகும். இவரது கட்சி சார்பில் சில தொகுதிகளில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். வேட்பாளர்களுக்கு ஆதரவுகோரி அசாதுதீன் ஓவைசி சார்பில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் ஓட்டு பிரிய வாய்ப்பு
அசாதுதீன் ஓவைசியின் கட்சி சார்பில் வேட்பாளர்கள் தனியாக களமிறங்குவது என்பது காங்கிரஸ் கட்சிக்கான முஸ்லிம்களின் ஓட்டுக்களை பிரிக்கும். இது பாஜகவுக்கு சாதகமாக அமையலாம் என கூறப்படுகிறது. குஜராத்தில் காலம் காலமாக காங்கிரஸ்-பாஜக இடையே போட்டி நடந்த நிலையில் தற்போது ஆம்ஆத்மியும் நுழைந்துள்ளது. இதனால் ஓட்டுக்கள் பிரியும் தருவாயில் இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது.

காங்கிரசுக்காக வாபஸ்
இந்நிலையில் தான் குஜராத்தில் யாரும் எதிர்பாராத வகையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமதாபாத் பாபுநகர் சட்டசபை தொகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் போட்டியிட்ட ஷாநவாஸ் பதான் திடீரென்று தேர்தலில் இருந்து வாபஸ் வாங்கி உள்ளார். இது அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மாறி உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு வேட்பாளருக்காக தான் அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ள விவகாரம் வெளியாகி உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக ஹிமாத் சிங் உள்ளார். இவர் தான் தற்போது மீண்டும் தேர்தலில் களமிறங்கி உள்ளார். இந்நிலையில் தான் ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர் ஷாநவாஸ் பதான் தனது வேட்புமனுவை ராஜினாமா செய்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications