ஓசூரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி! போக்சோவில் சித்தப்பா கைது
ஓசூர்: ஓசூர் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக அவரது சித்தப்பாவை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஓசூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் ஏழு வயது மகள், வீட்டில் இருந்த போது அவரை தனியே விட்டுவிட்டு அவரது தாய் கடைக்குச் சென்றிருந்தாராம்.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, சிறுமியின் சித்தப்பா சிவகுமார் (29- தந்தையின் தம்பி) என்பவர் வீட்டிற்குள் புகுந்தார்.
அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். கடையிலிருந்து வீடு திரும்பிய தாய், நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தனர். புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிவகுமாரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்ற பிள்ளை போல் பார்க்க வேண்டிய சித்தப்பாவே சிறுமியை பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
