20 வயது மாணவியை தொழிலதிபருடன் "பழக" வைத்த கும்பல்.. பல லட்சம் மிரட்டி பணம் பறிப்பு! 5 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவியுடன் ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி, ரியல் எஸ்டேட் அதிபரை திட்டமிட்டு மிரட்ட ரூ.3 லட்சம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் பிடிபட்டுள்ள நிலையில், அவர்களுடன் சேர்ந்து செயல்பட்ட 20 வயது கல்லூரி மாணவியிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகேயுள்ள தம்மண்டரப்பள்ளியை சேர்ந்த 29 வயது இளைஞர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தனியார் கல்லூரியில் படிக்கும் 20 வயதான மாணவியுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. முதலில் சாதாரணமாக மெசேஜ்ஜில் தொடங்கி. பிறகு நாளடைவில் இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.

Hosur Instagram Honey Trap Police honey trap Hosur Instagram

என்ன நடந்தது?

இந்த சூழலில் தான் கடந்த 23ஆம் தேதி மதியம், அந்த மாணவியை சந்திப்பதற்காக நவீன் ஓசூர் கெலவரப்பள்ளி அணை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் பேசி கொண்டிருந்தபோது, திடீரென காரில் வந்த 5 பேர் அவர்களை சுற்றிவளைத்துள்ளனர். அந்த பெண்ணுடன் பேசுவதை மனைவியிடம் சொல்லிவிடுவோம் என சொல்லி மிரட்டியுள்ளனர். அப்படி யாரிடமும் சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.3 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து அந்த தொழிலதிபரையும், மாணவியையும் தங்களது காரில் ஏற்றி கொண்டு பைரமங்கலம் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று தொழிலதிபர் கூறியதால், அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி கொடுக்கும்படி வற்புறுத்தியுள்ளனர். பின்னர் அந்த நகைகளை ஓசூரில் உள்ள அடகுக் கடையில் அடைமானம் வைத்து, அதன்மூலம் கிடைத்த பணத்தை வாங்கி கொண்டு 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

பகீர் திட்டம்

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தொழிலதிபர், நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், இது தற்செயலாக நடந்த சம்பவம் அல்ல என்பதும் முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட பணம் பறிப்பு என்பதும் தெரியவந்தது. அதாவது அந்த தொழிலதிபரிடம் பணம் பறிக்கத் திட்டமிட்ட கும்பல், இதற்காக அந்த மாணவியை பயன்படுத்தியுள்ளனர்.

எல்லாமே பிளான்

அந்த கும்பலை சேர்ந்த ஹரிஹரன் என்பவர், தன்னுடன் பழக்கத்தில் இருந்த கல்லூரி மாணவியை இதற்கு பயன்படுத்தியுள்ளார். அந்த தொழிலதிபர் இன்ஸ்டாகிராம் கணக்கு விவரங்களை மாணவியிடம் கொடுத்து, அவருடன் நட்பை ஏற்படுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளார். அதன்படியே மாணவியும் தொழிலதிபரிடம் இன்ஸ்டாகிராமில் பேசி நெருக்கத்தை வளர்த்துள்ளார்.

5 பேர் கைது

அதைத் தொடர்ந்தே கெலவரப்பள்ளி அணைப் பகுதிக்கு வரவழைத்து 5 பேர் அவரை வழிமறித்துள்ளனர். மாணவியை அழைத்து கொண்டு அங்கு ஏன் வந்தாய் என கேட்டு மிரட்டி, இருவரையும் காரில் ஏற்றி சென்றுள்ளனர். பின்னர் நகைகளை அடைமானம் வைத்து கிடைத்த பணத்தை பறித்து கொண்டு தப்பியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்கள் ஹரிகரன் (22), அப்ராஸ் (24), மகேந்திரன் (26), பாலாஜி (23), நவீன்குமார் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 20 வயது கல்லூரி மாணவியிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று இன்ஸ்டாகிராம் மூலம் வேறு நபர்களிடம் பழகி, அவர்களை திட்டமிட்டு வரவழைத்து பணம் பறித்துள்ளார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+