கர்நாடகாவில் கன மழை.. தென் பெண்ணையாற்றில் நீர் வரத்து அதிகரிப்பு: உற்று பார்த்தால் ஒரே நுரை.. கொடுமை
ஒசூர்: கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் தென் பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Recommended Video
அதேநேரம், நுரைகளுடன் வரும் தொழிற்சாலை ரசாயன கழிவுகளால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தென் பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இன்று தென் பெண்ணை ஆற்றின் வழியாக ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு 707 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.

கெலவரப்பள்ளி அணை நீர்
கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும், தற்போது அணையில் 41.83 அடி நீர் இருப்பு உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 640 கனஅடி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ரசாயன நுரை
கனமழையால் தென்பெண்ணையாற்றில் வரும் அதிகப்படியான நீரில் கர்நாடகா மாநிலத்தில் ஆற்றங்கரை ஓரமாக உள்ள தொழிற்சாலைகள் தேக்கி வைத்துள்ள ரசாயன கழிவுகள் தொடர்ந்து ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த ரசாயன கழிவு நுரைகள் ஒசூர் கெலவரப்பள்ளி அணைப்பகுதிகளில் குவியல் குவியலாக குவிந்து காணப்படுகின்றன.

மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்
மத்திய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணைப்படி கடந்த ஆண்டு தமிழக கர்நாடகா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தென்பெண்ணை ஆற்றில் நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு எடுத்து சென்றனர். இந்த நிலையில் எந்த ஆய்வு முடிகளும் வெளியிடப்படாத நிலையில் தொடர்ந்து ரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருவது கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மறுப்பு
அதேநேரம் கர்நாடக தரப்பு தாங்கள் தண்ணீரை புனிதமாக கருதுபவர்கள் என்றும், எனவே அதில் கழிவுநீரை கலக்கவில்லை என்றும் தமிழக பகுதிகளில் தான் கழிவு நீர் கலக்கிறது என்று குற்றம் சாட்டி வருகிறது.

ஆய்வு முடிவு தேவை
ஆய்வு முடிவுகள் வெளியே வந்தால் அது எந்த மாதிரி கழிவு என்பது தெரியவரும். இதன் மூலமாக அது எங்கே கலக்கிறது என்பதை கண்டறிய முடியும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். ஆனால், ஆய்வு முடிவுகள் இன்னும் வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கே உள்ளது
கெலவரப்பள்ளி அணைக்கட்டு பூங்கா ஒசூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து 52 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த அணைக்கட்டு 1995 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தின் எல்லை பகுதி மிகவும் அருகாமையில் 8 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த சுற்றுலாத்தலம் ஒசூர் மக்களுக்கு சிறந்த பொழுது போக்கு தலமாக உள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்து மக்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications