ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னை ஆன்ட்டினு கூப்பிட்டா போலீஸுக்கு போவேன்.. "லைகர்" ஃபேன்ஸுக்கு புஷ்பா பட நடிகை வார்னிங்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: இனி யாரேனும் என்னை ஆன்டி என அழைத்தால் போலீஸில் புகார் அளிப்பேன் என தலுங்கு நடிகை அனுசுயா பாரத்வாஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் அனுசுயா பாரத்வாஜ். இவர் தொலைகாட்சி தொடர்களில் நடத்துள்ளார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மீடியா துறையில் இருந்து வருகிறார். இவர் சாக்ஷி டிவியல் செய்தி வாசிப்பாளராக இருந்தார், பின்னர் மா மியூசிக்கில் ஆங்கராகவும் இருந்தார்.

இவர் வேதம் மற்றும் பைசா ஆகிய படங்களுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். இவர் 2016ஆம் ஆண்டு நாகார்ஜுன நடித்த சொக்கடே சின்னி நயனா எனும் படத்தில் நடித்திரு்நதார். இதன் பிறகு ஷனம் என்ற படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.

ரங்கஸ்தலம்

ரங்கஸ்தலம்

இவர் ரங்கஸ்தலம் படத்தில் நடித்துள்ளார். பின்னர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா எனும் படத்தல் தாட்ஷாயிணி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது புஷ்பா பார்ட் 2விலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் தேவரகொண்டா நடிப்பில் வெளியான லைகர் படம் நெகட்டிவ் கமென்ட்ஸை பெற்று வருவதை அடுத்து அந்த படத்தை நடிகை அனுசுயா விமர்சனம் செய்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி

அர்ஜுன் ரெட்டி

அர்ஜுன் ரெட்டி படத்தின் விளம்பரத்தின் போது கூட விஜய் தேவரகொண்டா தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக அனுசுயா கூறியிருந்தார். இந்த சம்பவம் நடந்து முடிந்து 5 ஆண்டுகள் ஆன பிறகும், தற்போது இது குறித்து நடிகை அனுசுயா போட்ட ட்வீட் அவருக்கே எதிராக திரும்பிவிட்டது. அந்த ட்வீட்டில் தாமதமானாலும் கர்மா என்பது ஒருவரை திருப்பி அடித்துவிடும். தாயின் வலிகள் வீணாகாது, கர்மவினை வருவது கடினம், ஆனால் எப்படியும் ஒருவருக்கு வந்துவிடும் என அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

அனுசுயா போட்ட ட்வீட்

அனுசுயா போட்ட ட்வீட்

இதையடுத்து அனுசுயா போட்ட ட்வீட் வைரலானதை அடுத்து அவரை விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் டிரோல் செய்து வருகிறார்கள். அவரை ட்விட்டரில் "ஆன்ட்டி" என அழைக்கிறார்கள். மேலும் அனுசுயாவை துன்புறுத்தும் அளவுக்கு நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்திருந்தனர். இதனால் அனுசுயா பெரும் பாதிப்பை சந்தித்தார்.

ஆன்ட்டியா

ஆன்ட்டியா

இதையடுத்து அனுசுயா தனது ட்விட்டரில் நெட்டிசன்களை எச்சரித்துள்ளார். அதில் இதற்கு மேலும் எனது வயதை காரணம் காட்டி ஆன்ட்டி என அழைத்தாலோ அசிங்கமாக விமர்சித்தாலோ என் குடும்பத்தை இழுத்தாலோ அவர்களுடைய அக்கவுண்டன் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து போலீஸிடம் கொடுத்து விடுவேன். ஒரு காரணமும் இல்லாமல் என்னை விமர்சிப்பதை நான் ஏற்க மாட்டேன். இதுவே எனது கடைசி எச்சரிக்கை என ட்வீட் போட்டுள்ளார். மேலும் எனக்கு 37 வயதுதான் ஆகிறது. 25 வயதுக்கு மேற்பட்டவர்களை எப்படி ஆன்ட்டி என அழைக்கலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Telugu Actress Anasuya Bharadwaj warns netisans those who calls her aunty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X