Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெலுங்கானா குதிரை பேரம்.. இந்தாங்க ஆதாரம்! மறுத்த பாஜகவுக்கு வீடியோ ஆதாரத்தை காட்டி கேசிஆர் பதிலடி

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: தெலுங்கானாவில் 4 டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏக்களை ரூ.100 கோடிக்கு வாங்க பேரம் பேசியதாக தெரிவித்த குற்றச்சாட்டை பாஜக மறுத்து வந்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தெலுங்கானா மாநிலத்தில் சந்திர சேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதில் இருந்தே கேசிஆர் தான் முதலமைச்சராக உள்ளார்.

இம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிர பணியாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே கடந்த சில மாதங்களுக்கு முன் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் தேசிய செயற்குழு கூட்டத்தை பாஜக கூட்டியது.

தென்னிந்திய மாநிலங்கள்

தென்னிந்திய மாநிலங்கள்

அந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆபரேசன் சவுத் இந்தியாவை அறிவித்தார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானாவிலும் பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என அவர் முழங்கினார். அதன் தொடர்ச்சியாக அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்துக்கு சென்று வருகின்றனர்.

பாஜக மீது ராவ் விமர்சனம்

பாஜக மீது ராவ் விமர்சனம்

அதே சமயம் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ், மத்திய பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவுக்கு எதிராக 2024 லோக் சபா தேர்தலில் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சித் தலைமையை உருவாக்க அவர் முயன்று வருகிறார். இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் தேசிய கட்சியையும் அவர் தொடங்கினார்.

டிஆர்எஸ் எம்எல்ஏக்கள்

டிஆர்எஸ் எம்எல்ஏக்கள்

இந்த நிலையில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏக்கள் ரோகித் ரெட்டி, பீராம் ஹர்ஷவர்தன், காந்தாராவ், பாலா ராஜு ஆகிய 4 பேரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கட்சியிலிருந்து விலகிவிடுமாறு பாஜக ரூ.100 கோடி வரை பேரம் பேசிய தகவல் வெளியானது. இதுதொடர்பாக வெளியான 2 ஆடியோக்கள் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

3 பேர் கைது

3 பேர் கைது

இது குறித்து எம்.எல்.ஏ. ரோகித் ரெட்டி அளித்த புகாரின் அடிப்படையில் சைபராபாத் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரித்த தெலுங்கானா உயர்நீதிமன்றம் பேரம் பேசிய சதீஷ் சர்மா, கே.நந்தகுமார், சிம்ஹயாஜுலு ஆகியோரை கைது செய்ய உத்தரவிட்டது. அதன் பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கே.சி.ஆர். வெளியிட்ட வீடியோ

கே.சி.ஆர். வெளியிட்ட வீடியோ

இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற விழாவில் 4 எம்.எல்.ஏக்களை மேடையில் ஏற்றி பாராட்டிய சந்திரசேகர் ராவ், டெல்லியை சேர்ந்த சில புரோக்கர்கள் பேரம் பேசியதாக விமர்சித்தார். சந்திரசேகர் ராவின் குற்றச்சாட்டை பாஹக மறுத்து இருக்கும் நிலையில், சந்திரசேகர் ராவ் பாஜகவினர் டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏக்களிடம் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

தெலுங்கானா மாநிலத்தில் நேற்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இந்த குதிரை பேர ஆடியோ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் சந்திரசேகர் ராவ் வெளியிட்ட இந்த வீடியோ தெலுங்கானா மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+