"ஹேய்.. எப்புட்றா".. ஒரே நேரத்தில், ஒரே வீட்டில், 2 மனைவியும் கர்ப்பம்.. மாறி மாறி முத்தம்.. அடடடடே
ஒரே நேரத்தில் 2 மனைவிகள் கர்ப்பமான செய்தியை கணவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்
ஹைதராபாத்: ஒரு யூடியூபரின் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி கொண்டிருக்கிறது.. 2 மனைவிகளுடன் எடுத்துக் கொண்ட வீடியோவைதான் அந்த யூடியூபர் பதிவிட்டுள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் அர்மான் மாலிக்.. இவர் ஒரு யூடியூப் சேனலை சொந்தமாகவே நடத்தி வருகிறார்.. அந்த சேனலில், லைப் ஸ்டைல் பற்றிய விஷயங்களை தினமும் பதிவிட்டு வருகிறார்.
இவரது யூடியூப் கண்டென்ட்டுகளுக்காகவே ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.. கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் இந்த யூடியூப் சேனலுக்கு தக்க வைத்திருக்கிறார்.

2 திருமணம்
கடந்த 2011ம் ஆண்டு, இவருக்கு திருமணமானது.. பாயல் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.. சிராயு மாலிக் என்கிற மகன் இவர்களுக்கு இருக்கிறான்.. பிறகு, கடந்த 2018ம் ஆண்டு, கிருத்திகா என்ற பெண்ணை மாலிக் திருமணம் செய்து கொண்டார்.. கிருத்திகா என்பவர் மாலிக்கின் நெருங்கிய தோழியாவார்.. இது ஒரு காதல் திருமணமும்கூட.... 2 மனைவிகளுமே ஒரே வீட்டில் ஒன்றாகவே வசித்து வருகிறார்கள்.. இந்நிலையில், தற்போது மாலிக் ஒரு வீடியோ வெளியிட்டு வெளியிட்டுள்ளார்.. அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார்..

2 கர்ப்பங்கள்
அந்த பதிவில் தன்னுடைய இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமானதாக அறிவித்திருக்கிறார் மாலிக்.. அதுமட்டுமல்ல, 2 மனைவுகளுடன் நடத்திய போட்டோ ஷூட் போட்டோவையும் அந்த வீடியோவில் வெளியிட்டு இருக்கிறார். 2 மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமான தகவலை வெளியிட்டுள்ளதோடு, அவர்களுடன் போட்டோஷூட்டும் நடத்தி அதனையும் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ ஷூட்தான் இணையத்தை கலக்கி கொண்டிருக்கின்றன.. பலரும் இந்த மகிழ்ச்சியான குடும்பத்துக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்... அந்த போட்டோக்களில், கர்ப்பமாக இருக்கும் 2 மனைவிகளுக்கும் முத்தம் தந்துள்ளார் மாலிக்...

முத்தம் தந்த மாலிக்
ஒரு மனைவியின் வயிற்றில் முத்தம் கொடுக்கும் காட்சியும், இன்னொரு மனைவியின் வயிற்றில் காதை வைத்து குழந்தையின் சத்தத்தைக் கேட்கும் காட்சியையும் மாலிக் பதிவு செய்துள்ளார்.மனைவிகள் கர்ப்பம் அடைந்தது மாலிக்குக்கு சந்தோஷத்தை தந்தாலும், நெட்டிசன்கள் பலர் அவரை கடுமையாக ட்ரோல் செய்தும் வருகின்றனர்.. அதெப்படி? ஒரே நேரத்தில் 2 மனைவிகளும் கர்ப்பமாக முடியும்? என்றும் சிலர் சந்தேகங்களை கேட்டு வருகிறார்கள்.. அதிலும் ஒரு நெட்டிசன், "ஒரு கிரிக்கெட் டீமையே உங்களால் உருவாக்க முடியும் போல என்றும் கமெண்ட் அடித்துள்ளார்..

ஒரே வீட்டிற்குள்
மேலும் பலர், 2 மனைவிகள் வைத்திருப்பதை சட்டம் அனுமதிக்கிறதா? என்றும் கேள்விகளை எழுப்பி உள்ளனர். இந்த யூடியூப் சேனல் மூலமாக, மாலிக்குக்கு லட்சக்கணக்கில் வருமானம் வருகிறதாம்.. ஆரம்ப கட்டத்தில், முதல் மனைவி பாயலும்கும் மாலிக்குக்கும் நிறைய கருத்து மோதல் இருந்ததாம்.. அதனால், சில காலம் கிருத்திகாவுடன் டெல்லியில் தனியாக வசித்து வந்துள்ளார் மாலிக்.. பிறகு இவர்களுக்குள் சமாதானமாகி 3 பேருமே ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பித்தார்களாம்.. அதற்கு பிறகு இவர்களுக்குள் சண்டையே வரவில்லையாம்..!!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications