ஹைதராபாத் கூட்டு பலாத்காரம்! மைனர் சிறுமி படத்தை வெளியிட்ட பாஜக எம்எல்ஏ சொன்ன விளக்கம் என்ன தெரியுமா
ஹைதராபாத்: ஹைதராபாத் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் படத்தை வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கடந்த மே 28ஆம் தேதி அங்குள்ள கேளிக்கை விடுதியில் பார்டி நடந்துள்ளது. இந்த பார்டிக்கு 17 வயது சிறுமி ஒருவர் சென்றுள்ளார்.
பார்டி முடிந்து வீடு திரும்பும் சமயத்தில் வீட்டில் விட்டுவிடுவதாகக் கூறி, சிறுமியை 5 பேர் பென்ஸ் காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை
இடையில் அவர்கள் ஒரு கடையில் உணவு சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் அச்சிறுமியை வீட்டில் விடவில்லை. மாறாக பென்ஸ் காரில் இருந்து இன்னோவா காருக்கு மாறி உள்ளனர். அதன் பின்னர், ஜூப்ளி ஹில்ஸ் பகுதிக்குச் சென்று, அங்கு வைத்து அந்த சிறுமியை அவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். காரை சுற்றி ஒவ்வொருவரும் பாதுகாப்புக்கும் நின்றுள்ளனர். அதன் பின்னர் சிறுமியை மீண்டும் அந்த கேளிக்கை விடுதியிலேயே கொண்டு போய் விட்டுள்ளனர்.

அதிர்ச்சி
இந்தச் சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்குப் பின்னர், அச்சிறுமியின் தந்தை கழுத்தில் ஏற்பட்ட காயம் குறித்துக் கேட்டுள்ளார். அப்போது தான் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அச்சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். கடும் அதிர்ச்சியில் இருந்த அச்சிறுமியால் ஒரு பெயரை மட்டுமே சொல்ல முடிந்தது. இதனால் சிசிடிவி கேமரா உள்ளிட்ட மற்ற ஆதாரங்களை வைத்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

4 பேர் கைது
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது. இதுவரை இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஐந்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூன் 3ஆம் தேதி 18 வயது இளைஞன் முதலில் கைது செய்யப்பட்டான், அதைத் பின்னர் மூன்று சிறார்களும் காவலில் வைக்கப்பட்டனர்.

பாஜக எம்எல்ஏ
இந்நிலையில், தெலங்கானாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் பாதிக்கப்பட்ட மைனர் சிறுமியின் படத்தை வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவர் மீது ஹைதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 228A பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு
இது குறித்து ஹைதராபாத் போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், "ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் இளம்பெண்ணைக் கூட்டுப் பலாத்காரம் செய்தது தொடர்பாக அந்த பாஜக எம்எல்ஏ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஊடகங்களுக்கு வெளியிட்டார். இது பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. விசாரணையில் தலையிடும் வகையிலும் சிறுமிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் அவர் இதைச் செய்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

வீடியோ
கடந்த ஜூன் 4ஆம் தேதி பாஜக எம்எல்ஏ ஒருவர் மஜ்லீஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவரின் (மைனர்) மகன் காருக்குள் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் பாலியல் செயல்களில் ஈடுபடும் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். இருப்பினும், அந்த பாஜக எம்எல்ஏ தான் செய்தது சரி என்றே தொடர்ந்து கூறி வருகிறார்.

விளக்கம்
இது குறித்து அவர் கூறுகையில், "நான் வெளியிட்ட அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களில் குற்றம் சாட்டப்பட்டவரின் முகம் தான் தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தைக் காட்டாமலும் அவரது அடையாளத்தை வெளிப்படுத்தாமலும் தான் வெளியிட்டேன். இதை ஆதாரமாகவே போலீசார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டேன். அந்தப் படத்தில் இருக்கும் மஜ்லீஸ் கட்சி எம்எல்ஏவின் மகனை ஏன் போலீசார் குற்றவாளியாகக் குறிப்பிடவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.

போலீசார்
இது குறித்து போலீசார் தரப்பில் எதுவும் கூறவில்லை. அதேநேரம் பாதிக்கப்பட்ட அப்பெண் இப்போது கடும் அதிர்ச்சியில் உள்ளார். அவரிடம் சட்டப்பிரிவு 164 இன் கீழ் வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் அரசியல் செல்வாக்கு மிக்க நபர்களின் உறவினர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால், முறையான விசாரணையை உறுதிசெய்யும் வகையில் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications