Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி ஆவணப்படம் vs காஷ்மீர் ஃபைல்ஸ்..இடதுசாரி, பாஜக மாணவர்களால் ஹைதராபாத் பல்கலையில் டென்ஷன்!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை இடதுசாரிகளும் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை பாஜக ஆதரவு மாணவர்களும் திரையிட்டனர்.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை இடதுசாரி மாணவர்கள் ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் திரையிட்டனர். இதற்கு பதிலடியாக காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பாஜக ஆதரவு மாணவர்கள் திரையிட்டனர். இருதரப்பு நடவடிக்கைகளால் ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது.

2002-ல் குஜராத் இனப்படுகொலைகளை முன்வைத்து பிரதமர் மோடியை தொடர்புபடுத்திய பிபிசி ஆவணப்படம் இந்தியாவில் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. 2002-ல் குஜராத் முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி. இந்த ஆவணப்படம், நாட்டுக்கு எதிரானது என்பதால் தடை செய்யப்பட்டிருக்கிறது.

Hyderabad University Students Screen Documentry On PM, The Kashmir Files

ஆனால் இந்த ஆவணப் படத்தை பாஜகவுக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகளும் கையில் எடுத்துள்ளன. நாட்டின் மிக முக்கியமான பல்கலைக் கழகங்களில் பாஜகவுக்கு எதிரான இடதுசாரி மாணவர் அமைப்புகள், தடையை மீறி இந்த ஆவணப்படத்தை திரையிட்டு வருகின்றன. டெல்லி ஜே.என்.யூ, டெல்லி ஜாமியா பல்கலை, புதுச்சேரி பல்கலைக் கழகம் மற்றும் கேரளா கல்வி நிறுவனங்களில் பெரும் பதற்றத்துக்கு இடையே இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதற்கு பாஜக ஆதரவு மாணவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பல்கலைக் கழகங்களில் பதற்றத்தை தணிக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனாலும் லேப்டாப், செல்போன்கள் மூலம் மோடி தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது. கேரளாவில் காங்கிரஸ், இடதுசாரிகள் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இந்த ஆவணப் படத்தை திரையிட்டனர்.

Hyderabad University Students Screen Documentry On PM, The Kashmir Files

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பல்கலைக் கழகத்திலும் - Hyderabad Central University -ல் மோடி ஆவணப் படத்தால் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. பாஜகவுக்கு எதிரான இடதுசாரி அமைப்பான எஸ்.எப்.ஐ, இந்த ஆவணப்படத்தை திரையிட்டனர். 400க்கும் அதிகமான மாணவர்கள் இந்தப் படத்தை பார்த்தனர்.

இதற்கு பதிலடி தரும் வகையில் ஜம்மு காஷ்மீரில் பண்டிட்டுகள் படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பாஜகவின் ஏபிவிபி மாணவர் அமைப்பினர் திரையிட்டனர். காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம், மோடி குறித்த ஆவணப்படம் ஆகியவை ஒரே பல்கலைக் கழக வளாகத்தில் அடுத்தடுத்து திரையிடப்பட்டன. இதனால் அப்பல்கலைக் கழக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+