ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வந்துருச்சு- பணமதிப்பிழப்பு நாள் என கொண்டாடுங்களேன்..பாஜக மீது ஓவைசி அட்டாக்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: மத்திய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை வைத்து பணமதிப்பிழப்பு நாள் என கொண்டாட்டங்களுக்கு பிரதமர் மோடி தயாரா? என மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி எம்.பி கேள்வி எழுப்பி உள்ளார்.

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி. கறுப்புப் பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை; 50 நாட்களில் நிலைமை சீராகிவிடும் எனவும் உறுதி அளித்தார் பிரதமர் மோடி.

I suggest PM Modi to celebrate Demonetisation Day:Asaduddin Owaisi

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வந்த நாள் முதல் பொதுமக்கள் பட்ட துயரங்கள் ஏராளமன். வங்கிகள், ஏடிஎம்களில் பொதுமக்கள் அவசரநிலை காலம் போல நீண்ட வரிசைகளில் நின்று மாண்டு போய்... அது துயரம் தோய்ந்த நாட்கள்.

செல்லாத ரூபாய் நோட்டுகளுக்கு பதில் ரூ2000 உள்ளிட்ட புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் இப்போது ரூ2,000 நோட்டுகள் எங்கே இருக்கிறது என்பதே தெரியாத நிலைமை. கறுப்புப் பணம் ஒழியும்; தீவிரவாதம் அழியும் என்றெல்லாம் பேசப்பட்டன. ஆனால் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

I suggest PM Modi to celebrate Demonetisation Day:Asaduddin Owaisi

இந்த ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 58 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஆஜராகி வாதாடினார். இவ்வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் இந்த அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது. இதில் பி.வி. நாகரத்னா ம்ட்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது; சட்டத்துக்கு புறம்பாக செய்திருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் முறையான சட்டம் கொண்டு வந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும் என மத்திய பாஜக அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தார். எஞ்சிய 4 நீதிபதிகளும் மத்திய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என தீர்ப்பளித்துவிட்டனர். இதனால் பெரும்பான்மை என்ற அடிப்படையில் மத்திய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லுபடியாகும் என்பது உறுதியாகிவிட்டது.

மறக்குமா நெஞ்சம்? மதிப்பிழந்த நோட்டுக்கள்.. உயிரிழந்த இந்தியர்கள்! மோடி அறிவிப்பால் யாருக்கு பயன்? மறக்குமா நெஞ்சம்? மதிப்பிழந்த நோட்டுக்கள்.. உயிரிழந்த இந்தியர்கள்! மோடி அறிவிப்பால் யாருக்கு பயன்?

இத்தீர்ப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி, உச்சநீதிமன்றம்தான் தற்போது தீர்ப்பளித்துவிட்டது. பணமதிப்பிழப்பு செல்லுபடியாகும் என பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பளித்துவிட்டனர். இப்போது பணமதிப்பிழப்பு நாள் என கொண்டாடுவதற்கு பிரதமர் மோடி தயாராக உள்ளாரா? அன்றாட கூலிகளின் வாழ்க்கையை பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாசமாக்கிவிட்டது. இந்நிலையில் பணமதிப்பிழப்பு நாளை கொண்டாடுவார்களா? என கேள்வி எழுப்பி இருக்கிறார் ஓவைசி.

English summary
AIMIM chief Asaduddin Owaisi said that "I suggest PM Modi to celebrate 'Demonetisation Day' why don't they celebrate now? It is because they know that plumbers, drivers, artists, electricians, etc were destroyed due to demonetisation".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X