ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமிறி எழுந்த டி.ராஜா.. கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் இந்திய கம்யூ. கட்சியின் பொதுச்செயலாளரானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி ராஜா மீண்டும் தேர்வு

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தொடர்ந்து 2-வது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் .

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது தேசிய மாநாடு கடந்த 14-ந் தேதி தொடங்கி நடைபெற்ற நிலையில், நேற்று இந்த மாநாடு நடந்து முடிந்தது.

இதில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒருமித்த கருத்து கொண்ட அரசியல் சக்திகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது குறித்தும், பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு மாற்றை ஏற்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

அதிமுகவை பயன்படுத்த விரும்பும் பாஜக.. ஓபிஎஸ், இபிஎஸ் சிந்திக்க வேண்டும்.. டி.ராஜா வலியுறுத்தல்! அதிமுகவை பயன்படுத்த விரும்பும் பாஜக.. ஓபிஎஸ், இபிஎஸ் சிந்திக்க வேண்டும்.. டி.ராஜா வலியுறுத்தல்!

 பொதுச்செயலாளர்

பொதுச்செயலாளர்

இந்த கூட்டத்தில், அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தொடர்ந்து 2-வது முறையாக டி.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.. கடந்த 2019 ஜூலை மாதம் 21-ந் தேதி முதல்முறையாக இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்... 2007-19 கால கட்டத்தில் தொடர்ந்து 2 முறை மாநிலங்களவை எம்பியாக இருந்துள்ளார்... எனினும், இந்த முறை பொதுச்செயலாளர் பதவிக்கு ஏகப்பட்ட போட்டிகள் மறைமுகமாக இருந்து வந்தன.

 திமிறிய ராஜா

திமிறிய ராஜா

எனினும், கடும் எதிர்ப்பையும் மீறி, தமிழகத்தைச் சேர்ந்த டி.ராஜா, மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்... டி.ராஜா, கே.நாராயணா, அதுல்குமார் அஞ்சன், அமர்ஜித் கவுர், கானம் ராஜேந்திரன், பி.கே.காங்கோ, பிஸ்னோய் விஸ்வம், பல்லப் சென்குப்தா, அஜீஸ் பாஷா, ராம கிருஷ்ண பாண்டா, நாகேந்திரநாத் ஓஜா ஆகிய 11 பேர் தேசிய செயலகத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 உறுப்பினர்களைக்கொண்ட தேசிய செயற்குழுவும், 99 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கவுன்சிலும் இந்த மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

கட்சி

கட்சி

தமிழகத்தை சேர்ந்த டி.ராஜாவுக்கு வயது 73 ஆகிறது.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பதவியில், எஸ்.சுதாகர் இருந்து வந்த நிலையில், 2019ல், அவருக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. இதையடுத்து, அவருக்கு பதிலாக டி.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்... ஆனால், அப்போது முதலே, அதிகளவில் விமர்சனங்களை சந்தித்து வருகிறார் டி.ராஜா.. இவர் மிகச்சிறந்த பேச்சாளர்.. பார்லிமென்ட் விவாதங்களில் பங்கேற்று சிறப்பாக பேசி அசரடிக்கக்கூடியவர்.. அதிலும், மத்திய பாஜகவுக்கு எதிராக இவர் முன்வைக்கும் வலிய கருத்துக்கள், தேசிய அளவில் தாமரை கட்சிக்கு குடைச்சலை தரக்கூடியவை..

 தாமரை கட்சி

தாமரை கட்சி

எனினும், கட்சியின் நடவடிக்கைகளில் இவரால் சுறுசுறுப்பாக செயல்பட முடியவில்லை என்ற பேச்சு அவ்வப்போது எழுந்து அடங்கும்.. அந்தவகையில், இந்த முறையும் பொதுச்செயலாளராக இவரை, தேர்வு செய்ய நிறையவே எதிர்ப்புகள் இருந்தன.. குறிப்பாக, கேரளா போன்ற மாநிலங்களில் எதிர்ப்பு வலுவாகவே இருந்து வந்தது... அதனால்தான், சமீபத்தில், திருவனந்தபுரத்தில் நடந்த மாநில மாநாட்டிற்கு கூட ராஜா அழைக்கப்படவில்லை... இப்படி எதிர்ப்புகள் பெருகியதால், எப்படியும் ராஜாவின் தலைமை இந்த முறை மாறிவிடும் என்றும் எதிர்பார்ப்புகள் எகிறி வந்தது.. ஆனால், கட்சியின் 24வது தேசிய மாநாட்டில், பொதுச்செயலர் பதவியில் ராஜாவே நீடிக்கலாம் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அது, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது..!!

English summary
Important announcement and CPI D Raja re elected CPI general secretary for second term
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X