சுடுகாடு.. மண்டை ஓடு.. மாணவிக்கு பர்தா.. வேலூருக்கு கடத்தி வந்த வாத்தியார்.. இப்ப சிறையில் 1-2-3!

21 வயது பெண்ணை கடத்திய துணை பேராசிரியர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சுடுகாட்டில் இருந்து மண்டை ஓடு, எலும்புக்கூடு எடுத்து கொண்டு... மாணவியின் மாணவியின் வீட்டுக்கு பர்தா அணிந்து சென்றுள்ளார் பேராசிரியர் ஒருவர்.. அந்த மாணவியை மிரட்டி அவருக்கும் ஒரு பர்தாவை அணிய வைத்து வேலூருக்கு கடத்தி வந்துவிட்டார்.. கிச்சனில் கேஸை திருப்பிவிட்டு வீட்டிற்கு தீ வைக்கவும் இந்த ஆசிரியர் பிளான் போட்டுள்ளார்.. இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்!

ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த இளம்பெண்ணுக்கு வயது 21 ஆகிறது.. ஒரு தனியார் பொறியியல் காலேஜில் பிடெக் படித்து வந்தார்.

அதே காலேஜில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்தவர் கிருஷ்ணமோகன்.. இளம்பெண்ணிடம் நட்பாக பழகுவார்.. ஆனால் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

ஒருதலை காதல்

ஒருதலை காதல்

ஒருநாள் மாணவியிடம் தன் காதலை எடுத்து சொல்லவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே காலேஜ் படிப்பும் முடிந்து, அந்த பெண் மேற்படிப்புக்காக பெங்களூரு சென்றுவிட்டார்.. உடனே கிருஷ்ணமோகனும் அவரை தேடி பெங்களூருக்கு சென்று லவ் டார்ச்சர் செய்தார்.. இதனால் பயந்துபோன இளம்பெண், தன் வீட்டுக்கு சொல்லி இதை பற்றி அழுதுள்ளார்.. அதனால் பெற்றோரும் மகளை தங்கள் ஊருக்கு அழைத்து வந்து விட்டனர்.

பர்தா

பர்தா

இந்நிலையில் 2 நாளைக்கு முன்பு பெண்ணின் பெற்றோர் உறவினர் ஒருவரது கல்யாணத்துக்காக சென்றுவிட்டனர்.. அப்போது இளம்பெண் மட்டும் தனியாக இருந்தார்.. அந்த சமயத்தில் பர்தா அணிந்து ஒரு பெண் வீட்டிற்குள் நுழைந்து, அப்பெண்ணுக்கும் பர்தாவை அணிவித்து வலுக்கட்டாயமாக அவரை கடத்தி சென்றுள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பெண்ணின் பெற்றோருக்கு தகவல் சொல்லவும், அதிர்ந்து போன அவர்கள், போலீசுக்கு விஷயத்தை சொன்னார்கள்.. போலீசாரும் இளம்பெண்ணின் வீட்டுக்குச் சென்று சோதனை செய்தனர்.

மண்டை ஓடு

மண்டை ஓடு

அப்போது அவரது வீட்டின் கிச்சனில் எலும்புக் கூடு, மண்டை ஓடு இருந்தன.. பெண்ணின் துணியும் பக்கத்திலேயே இருந்தன.. கேஸ் சிலிண்டரை திறந்து வைத்துள்ளார்.. அதற்கு பக்கத்திலேயே ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது.. உடனடியாக கேஸ் கசிவதை போலீசார் சரி செய்தனர்..

செல்போன் சிக்னல்

செல்போன் சிக்னல்

அப்போதுதான் பெற்றோர் கிருஷ்ண மோகனை பற்றி சொல்லவும், அவரது செல்போன் சிக்னல் டிரேஸ் செய்யப்பட்டது... அதன்படி நெல்லூர், வேலூர் என இரு டீமாக பிரிந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். கடைசியில் வேலூர் ஸ்டேஷனில் கடத்தப்பட்ட பெண்ணுடன் கிருஷ்ண மோகன் நின்றிருந்தார்.. அவரை கையுங்களவுமாக பிடித்து பெண்ணை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

மெழுகுவர்த்தி

மெழுகுவர்த்தி

கிருஷ்ண மோகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இது ஒரு தலை காதலினாலும், இளம்பெண் தன் காதலை ஏற்காததாலும் கடத்தி வலுக்கட்டாயமாகத் கல்யாணம் செய்ய பிளான் செய்துள்ளார்.. அதே சமயம், கேஸ் வெடித்து அந்த பெண் தானாக உயிரிழந்தது போல் இருக்க வேண்டுமாம்.. அதற்காகத்தான், வீடடில் கேஸை திறந்துவிட்டு மெழுகுவர்த்தியையும் கொளுத்திவிட்டு வந்ததாக சொன்னார்.

சுடுகாடு

சுடுகாடு

கேஸ் பற்றிக் கொண்டு வீடே தீப்பற்றி எரிந்துவிட்ட நிலையில் பெண்ணும் அதிலேயே கருகி உயிரிழந்ததாக அனைவரும் நம்ப வேண்டும், வெறும் எலும்புக்கூடும், மண்டை ஓடும்தான் மிச்சம் என்று போலீசார் நினைக்க வேண்டுமாம்.. அதற்காகத்தான் சுடுகாட்டிற்கு போய் எலும்புக்கூடு, மண்டை ஓட்டினை எடுத்து வந்துள்ளார். இப்போதைக்கு உதவிப் பேராசிரியர் ஜெயிலில் உள்ளார்.. இனிதான் விசாரணை ஆரம்பமாகும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+