இது தாங்க விடாமுயற்சி.. வாட்ச்மேனாக வேலை பார்த்துக் கொண்டு 2 போட்டித்தேர்வுகளில் வென்ற இளைஞர்
ஐதராபாத்: தெலுங்கானாவில் வாட்ச்மேன் வேலை பார்த்துக்கொண்டே அரசு வேலைக்கு படித்து கொண்டிருந்த இளைஞர் தற்போது இரண்டு அரசு போட்டித்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். வாட்ச்மேனாக ரூ. 9 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்த அந்த இளைஞர் இனி, ரூ. 83 ஆயிரம் சம்பளம் வாங்க இருக்கிறார்.
அரசு வேலை என்ற கனவு, லட்சியம் இல்லாத இளைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நல்ல சம்பளம், பணி பாதுகாப்பு, சமூகத்தில் உயரிய மதிப்பு என அரசு வேலையில் பல நன்மைகள் இருப்பதால் இளைஞர்கள் பலரும் படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்காக பகீரத பிரயத்தனம் செய்து வருகிறார்கள்.

இந்தியா போன்ற வேலை வாய்ப்பின்மை அதிகமாக இருக்கும் நாட்டில் அரசு வேலை கிடைப்பது எல்லாம் அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. 8 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட வேலைக்கு கூட முதுகலை பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. அவ்வளவு கடினமான இந்த போட்டியில் அரசு வேலை கிடைத்துவிட்டால்...இந்திய அணி கோப்பையை வென்றதற்கு நிகரான சாதனையாக இளைஞர்களால் பார்க்கப்படுகிறது.
நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது முக்கியம் அல்ல.. எவ்வளவு கடினமாக உழைக்கிறோம் என்பதே முக்கியம். இதை மெய்ப்பிக்கும் விதமாக தெலுங்கானாவில் வாட்ச்மேன் வேலை பார்த்துக்கொண்டே படித்த இளைஞர், இரண்டு அரசு வேலையை போட்டித்தேர்வுகளில் வென்று எட்டிபிடித்துள்ளார். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
தெலுங்கானாவின் மான்செரியல் மாவட்டத்தை சேர்ந்தவர் கோலே பிரவீன் குமார். 31 வயதான இவரது தந்தை மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். தாயார் பீடி சுற்றும் வேலை செய்து வருகிறார். வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும் பிரவீன் குமாரை அவரது பெற்றோர்கள் நன்றாக படிக்க வைத்தனர். எம்.காம், பி.எட், மற்றும் எம்.எட் ஆகிய படிப்புகளை முடித்து இருந்த பிரவீன் குமாருக்கு எந்த வேலையுமே கிடைக்கவில்லை.
அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டு இருந்த பிரவின் குமார் வேலையில்லாமால் அரசு வேலைக்கு படிப்பது கடினம் என நினைத்தார். அப்போதுதான் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இரவு நேர வாட்ச்மேன் பணிக்கு ஆள் எடுக்கப்படுவதை அறிந்தார். இந்த வேலைக்கு விண்ணப்பித்த பிரவீன் குமாருக்கு வேலையும் கிடைத்தது. இரவில் வாட்ச் மேன் வேலை பார்த்துக் கொண்டே பகலில் போட்டித்தேர்வுகளுக்கு படித்தார்.

தனது விடா முயற்சியின் பயனாக தற்போது அவர் இரண்டு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளாராம். முதுகலை ஆசிரியர் மற்றும் இளநிலை பேராசிரியர் என இரண்டு பணிகளுக்கு நடந்த போட்டித்தேர்வில் இரண்டிலுமே வெற்றி பெற்று தற்போது தேர்வாகியுள்ளார். வாட்ச்மேன் வேலையில் மாதம் ரூ. 9 ஆயிரம் மட்டுமே பிரவீன்குமாருக்கு கிடைத்தது.
தற்போது ரூ. 73 ஆயிரம் முதல் ரூ. 83 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்க இருக்கிறது. இளநிலை விரிவுரையாளர் பணியை தேர்வு செய்ய பிரவீன் குமார் முடிவு செய்துள்ளாராம். இது குறித்து பிரவீன் குமார் கூறுகையில், "வாட்ச்மேனாக பணி செய்யும் போது நான் ஒருபோதும் வேலை பார்ப்பதாக நினைக்கவில்லை. எனக்கு படிக்க நேரம் கிடைத்து இருப்பதாகவே எண்ணி படித்தேன்" என்று கூறினார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications