யூ டியூபில் சமையல் செய்து கலக்கிய இந்த பாட்டியை ஞாபகம் இருக்கா? 107 வயதில் காலமானார் மஸ்தானம்மா!

யூ டியூப் உலகில் பிரபலமாக இருந்த வயதான பெண்மணியான மஸ்தானம்மா 107 வயதில் நேற்று காலமானார்.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: யூ டியூப் உலகில் பிரபலமாக இருந்த வயதான பெண்மணியான மஸ்தானம்மா 107 வயதில் நேற்று காலமானார்.

யூ டியூப் மற்றும் பேஸ்புக் வீடியோக்களில் வயதான மூதாட்டி ஒருவர் சமையல் செய்யும் வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புள்ளது. யூ டியூபில் கண்ட்ரி புட்ஸ் என்ற பெயரில் செயல்பட்ட சேனலில்தான் இந்த மூதாட்டி சமைத்து வீடியோ வெளியிட்டுக் கொண்டு இருந்தார்.

குண்டூரை சேர்ந்த மஸ்தானம்மா என்ற இவருக்கு நிறைய பேர் இந்தியா முழுக்க ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் பிரபலம்

பெரும் பிரபலம்

கண்ட்ரி புட்ஸ் சேனலில் மஸ்தானம்மா வரும் வீடியோக்கள் எல்லாம் மிகவும் வைரல். இந்தியர்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டினர் கூட இவரது வீடியோக்களை விரும்பி பார்ப்பது வழக்கம். முக்கியமாக இவர் செய்யும் அசைவ உணவுகள், கடல் உணவுகள் மிக மிக பிரபலம்.

உலகின் வயதான நபர்

உலகின் வயதான நபர்

இவர் இந்த வருடம் முக்கியமான சாதனை ஒன்றையும் படைத்தார். இந்த வருடம் 107 வயதை அடைந்த போது இவர் உலகின் வயதான யூ டியூப் வீடியோ நபர் என்ற பெயரை பெற்றார். உலகம் முழுக்க இவர் பெயர் அப்போது பிரபலம் ஆனது.

மரணம் அடைந்தார்

மரணம் அடைந்தார்

ஆனால் கடந்த 4 மாதங்களாக இவரது வீடியோக்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. வேறு சிலர் சமைக்கும் வீடியோக்கள் மட்டுமே வந்தது. இந்த நிலையில் இந்த சேனலுக்கு சொந்தக்காரரான லட்சுமண் என்பர், மஸ்தானம்மா வயது முதிர்வு காரணமாக இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

வெளியானது வீடியோ

இதுகுறித்து அவர் வீடியோவும் வெளியிட்டு இருக்கிறார். மஸ்தானம்மாவின் இறுதிச்சடங்கு வீடியோவை இவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு மக்கள் கண்ணீருடன் கமெண்ட் செய்து வருகிறார்கள். மிகவும் பிரபலமாக இருந்த இவரை பிரிந்து வாடுவதாக பலர் தெரிவித்து இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+