Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 மேட்டர் பற்றி பிரதமர் பேசவே மாட்டார்.. அமித்ஷாவின் உளவுத்துறை என்னதான் செய்கிறது.. ஒவைசி அட்டாக்

பிரதமர் இந்த 2 விஷயங்களை பற்றி பேசவே மாட்டார் என ஓவைசி கூறியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: "பிரதமர் மோடி இந்த 2 விஷயங்களை பற்றி எப்பவுமே பேசமாட்டார்.. அது என்ன தெரியுமா?" என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார்.

இத்தனை மாதங்களாக தொற்று பாதிப்பு இந்தியாவை உலுக்கி எடுத்து வந்தாலும், சமீப காலமாக ஓரளவு குறைந்து வருகிறது.. ஆனால் முற்றிலும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் நீங்கவில்லை..

மற்றொரு பக்கம் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 வருடங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துவிட்டது.. விமானத்தை இயக்குவதைவிட பைக் போன்ற டூவீலர்களை ஓட்டுவதுதான் பெரும் சிக்கலாக உள்ளது..

 விமானங்கள்

விமானங்கள்

விமானங்களுக்கு பயன்படுத்தும் ஏடிஎப் எரிபொருள் விலையைவிட கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலைதான் 33 சதவீதம் அதிகமாக இருக்கிறது. விமானங்களுக்கு பயன்படுத்தும் ஏடிஎப் எரிபொருள் லிட்டர் ரூ.79 ஆக மட்டுமே இருக்கிறது... ஆனால் வாகனங்களுக்கான பெட்ரோல் லிட்டர் ரூ.110க்கும் மேல் சென்றுவிட்டது...

 பெட்ரோல்

பெட்ரோல்

டீசல் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பீஹார், கேரளா, கர்நாடகா, லடாக் ஆகிய மாநிலங்களில் விற்பனையாகி வருகிறது. "எரிபொருள் மீது அரசு விதித்து வரும் வரி மக்களிடம் கொள்ளையடிப்பதற்கு சமானம்" என்று ப.சிதம்பரம் நேற்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

 தீவிரவாதிகள்

தீவிரவாதிகள்

அதேபோல காஷ்மீரில் அப்பாவிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.. இந்த மாதத்தில் மட்டும், இதுவரை அப்பாவி பொது மக்கள் 11 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர்.. இதுவரை கொல்லப்பட்ட 11 பேரில் 5 பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதால், வெளிமாநிலத்தவரை காஷ்மீரில் இருந்து விரட்டும் திட்டத்துடன் தீவிரவாதிகள் செயல்படுவதாக சொல்லப்படுகிறது.. இதனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஓவைசி

ஓவைசி

இந்த பிரச்சனைகளை மையப்படுத்திதான், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசியும் தன்னுடைய அதிருப்தியையும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.. அக்கட்சியின் சார்பில் ஹைதராபாத்தில் நடந்த கூட்டத்தில் ஓவைசி பேசும்போது, "பிரதமர் மோடி 2 விஷயங்களைப் பற்றி எப்பவுமே பேசமாட்டார்... அது என்ன தெரியுமா? ஒன்று, நம் நாட்டில் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்னொன்று, லடாக்கில் சீனாவின் ஆக்கிரமிப்புகள்.. இந்த இரண்டையும் பேசவே மாட்டார்.. அதிலும் சீனா பற்றின பேச்சை எடுக்கவே பிரதமர் மோடி பயப்படுகிறார்.

 படுகொலை

படுகொலை

ஜம்மு காஷ்மீரில் நம்முடைய ராணுவ வீரர்கள் எத்தனையோ ஆபரேஷன்களில் படுகொலை செய்யப்பட்டனர்.. ஆனால், வரும் 24-ம் தேதி பாகிஸ்தானுடன் இந்தியா, டி-20 உலக கோப்பை விளையாட போகிறது.. காஷ்மீரில் தினம் தினம் பாகிஸ்தான் இந்திய மக்களின் உயிரில் 20-20 விளையாடி கொண்டுதானிருக்கிறது.. காஷ்மீரில் அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் இப்படி கொல்லப்படுவது, மத்தியில் பாஜக ஆட்சியின் தோல்வியைதான் எடுத்து காட்டுகிறது..

 குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இதில் கொடுமை என்னவென்றால, பீகார் மாநிலத்தின் ஏழை தொழிலாளர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டதுதான்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கீழ் இருக்கும் உளவுத்துறை என்னதான் செய்கிறது? இதெல்லாம் மத்திய அரசின் தோல்வி என்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை" என்றார் ஓவைசி. விரைவில் சட்டசபை தேர்தல்களை வடமாநிலங்கள் எதிர்கொள்ள உள்ள நிலையில், ஒவைசியின் இந்த பேச்சு பரபரப்பை அரசியல் களத்தில் ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+