வேலைக்கார பெண்ணை கொடுமைப்படுத்திய பிரபல நடிகை.. போலீசிடம் இருந்து பறக்கும் நோட்டீஸ்!
ஹைதராபாத்: தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகை டிம்பிள் ஹயாதி தன்னை கொடுமைப்படுத்தியதாக ஒடிசாவை சேர்ந்த பணிப்பெண் போலீசில் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். வேலைக்கு சேர்ந்த நாள் முதலே தினமும் கொடுமையை சந்தித்து வருகிறேன் என்றும், அடிக்கடி அவமானப்படுத்தி, சாப்பாடு கொடுக்காமல் கெட்ட வார்த்தைகளில் திட்டி கொடுமைப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரபல நடிகை டிம்பிள் ஹயாதி தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் விஷாலின் வீரமே வாகை சூடும் மற்றும் பிரபுதேவாவின் தேவி 2 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கெட்ட வார்த்தையில் திட்டினார்
நடிகை டிம்பிள் ஹைதராபாத்தில் ஷேக்வேட் அருகில் உள்ள இல்லத்தில் கணவர் டேவிட் உடன் வசித்து வருகின்றார். இவரது வீட்டில் பீகார் மாநிலம் ஒடிசாவை சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 22 ஆம் தேதி தான், இந்த இளம்பெண் வீட்டு வேலை செய்வதற்காக பணியில் சேர்ந்திருந்தார்.
இந்த நிலையில் பணிப்பெண் காவல் நிலையத்தில் நடிகை டிம்பிள் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். வேலைக்கு சேர்ந்த நாள் முதலே தினமும் கொடுமையை சந்தித்து வருகிறேன் என அந்த பெண் புகார் தெரிவித்துள்ளார். அடிக்கடி அவமானப்படுத்தி, சாப்பாடு கொடுக்காமல் கெட்ட வார்த்தைகளில் திட்டி கொடுமைப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
என் ஷுவிற்கு ஈடாகாது
மேலும் அவர் புகாரில், "கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி அவரது வீட்டில் இருந்த நாய் குரைத்துத் கொண்டே இருந்தது. இதனால் டிம்பிள் மற்றும் அவரது கணவர் டேவிட் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினர். "என் ஷுவிற்கு உன் வாழ்க்கை ஈடாகாது" என்று என்னை அவமதித்து பேசினர். என் பெற்றோரை கொலை செய்யலாம் என்றும் மிரட்டியுள்ளனர் என்றார்.
இவை அனைத்தையும் நான் செல்போனில் வீடியோவாக பிடித்ததை பார்த்ததும், என் செல்போனை டேவிட் எடுத்துக்கொண்டு உடைத்தார். செல்போனை திரும்பக் கொடுக்க முடியாது என்று கூறியதால் என்னை இருவரும் சேர்ந்து தாக்கினார்கள். பின்னர் செல்போனை பறித்து உடைத்தனர். இதில் என் மேலாடை கிழிந்துவிட்டது. அப்போது என்னை அவர்கள் அரைநிர்வாணமாக வீடியோ எடுக்க வைத்தனர். அந்த நேரத்தில் எப்படியோ நான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன் என்றார் அந்த பெண்.
நோட்டீஸ் அனுப்ப முடிவு
இந்த சம்பவம் குறித்து நான்கு பிரிவுகளின் கீழ் பிலிம் நகர காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். வீட்டு பணிப்பெண் அளித்த புகாரை ஏற்றுக்கொண்டுள்ளோம். பணிப்பெண் அளித்த புகாரின் பேரில் நடிகை மற்றும் அவரது கணவரை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்புவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி காரின்மீது செருப்பு வீச்சு சம்பவத்திலும் நடிகை டிம்பிள் ஹயாதி சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications