கர்ப்பிணிக்கு வந்த திடீர் குழப்பம்.. தடாலடி முடிவு.. கடைசியில் பார்த்தால்.. உறைந்து போன தெலுங்கானா
கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
ஹைதராபாத்: பெண் குழந்தை பிறந்துவிடும் என்ற பீதியால் இளம்பெண் எடுத்த முடிவு, தெலுங்கானாவில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
பெண் குழந்தைகள் என்றாலே சுமையாக கருதும் போக்கு அன்று முதல் இன்றுவரை சமூகத்தில் உள்ளது.. எத்தனையோ பெண்கள் சாதித்து மேலெழுந்து வந்தாலும், பெண் குழந்தை என்றாலே ஒருவித கலக்கம் நிறைந்த தயக்கம் இன்றும் இந்திய கிராமப்புறங்களில் இருக்கத்தான் செய்கிறது.
நம் தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் பெண் குழந்தைகளை பிறந்ததும் கொல்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.. வயிற்றிலேயே சிசுவை கொல்வதும் ஆங்காங்கே நடந்து கொண்டுதானிருக்கிறது..

மகிழ்ச்சி
அந்த வகையில், தெலுங்கானாவிலும் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. ஆனால், இது கொலை அல்ல.. என்டிஆர் நகர் காலனி பகுதியில் வசித்து வந்தவர் ரம்யா.. இவர் முதல் முறையாக கர்ப்பம் அடைந்தபோது, குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.. அத்துடன் அனைவருமே, ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று ரம்யாவிடம் சொல்லி வந்திருக்கிறார்கள்.. ஆனால் பெண் குழந்தை பிறந்திருக்கிறது... இந்நிலையில் ரம்யா இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்தார்..

உறவினர்கள்
உறவினர்கள் இந்த முறையும் பெண் குழந்தை தான் பிறக்கும் என்று ரம்யாவிடம் சொல்லி வந்திருக்கிறார்கள்... ரம்யாவுக்கோ ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசை இருந்திருக்கிறது.. இந்த முறையும் பெண் குழந்தை பிறந்துவிட்டால், என்னாவது என்ற கவலை ஏற்பட்டுள்ளது.. பெண் குழந்தைதான் பிறக்கும் என்று உறவினர்களும் விடாமல் சொல்லி கொண்டே இருந்தனர்.

ரம்யா
இது ரம்யாவுக்கு ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்தி வந்திருக்கிறது.. சரியாக தூங்காமலும், சாப்பிடாமலும் இருந்துள்ளார்.. இது அவருக்கு பலவீனத்தையும் ஏற்படுத்தி வந்திருக்கிறது.. அதற்குள் பிரசவ தேதியும் நெருங்க ஆரம்பித்துவிட்டது.. இதனால் மனவேதனையும் குழப்பமும் அதிகமான ரம்யா வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்..

விசாரணை
இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கிடைத்ததுமே அவர்கள் விரைந்து வந்து ரம்யாவின் சடலத்தை மீட்டனர்.. பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.. போஸ்ட் மார்ட்டமும் நடந்தது.. அப்போதுதான், ரம்யாவின் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என்பது தெரியவந்தது.. இதை கேட்டதும் குடும்ப உறவினர்கள் கதறி கதறி அழுதிருக்கிறார்கள்... இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications