ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கழுத்தில் ஆட்டுக்குட்டி.. தலையில் கொம்பு! ஃபன் பண்ணும் ராகுல் காந்தி - அட இது அண்ணாமலை போஸ் ஆச்சே

Google Oneindia Tamil News

ஐதராபாத்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெலுங்கானாவில், ஆட்டுக்குடியை கழுத்தில் சுமந்தும், தலையில் கொம்பு அணிந்து நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

மத்திய பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கடந்த 7 ஆம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி.

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி செப்டம்பர் 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு சென்றடைந்தார்.

தெலுங்கானாவில் பாரத் ஜோடா யாத்திரை: தலைப்பாகை அணிந்து.. பழங்குடியின மக்களுடன் நடனம் ஆடிய ராகுல்! தெலுங்கானாவில் பாரத் ஜோடா யாத்திரை: தலைப்பாகை அணிந்து.. பழங்குடியின மக்களுடன் நடனம் ஆடிய ராகுல்!

 பயண விபரம்

பயண விபரம்

150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்தித்து வருகிறார். 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது..

கர்நாடகாவில் யாத்திரை

கர்நாடகாவில் யாத்திரை

கன்னியாகுமரியில் தொடங்கி, கேரளாவின் பல மாவட்டங்கள் வழியாக 18 நாட்கள் நடந்து வந்த ராகுல் காந்தி, மீண்டும் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்தார். அங்கிலிருந்து கர்நாடக மாநில எல்லைக்குள் நுழைந்த ராகுல் காந்தி, அக்டோபர் 1 முதல் நடைபயணம் மேற்கொண்டார்.

கர்நாடகா நடைபயணம்

கர்நாடகா நடைபயணம்

கர்நாடகாவில் இவர் மேற்கொண்ட நடைபயணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கர்நாடகாவில் இவர் நடைபயணம் மேற்கொண்டிருந்த நேரத்தில்தான் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. ராகுல் காந்தியும் அங்கிருந்தபடியே வாக்கை செலுத்தினார்.

கொம்பும் ஆடும்

கொம்பும் ஆடும்

இந்த நிலையில் கர்நாடகாவில் நடைபயணத்தை முடித்துக்கொண்டு தெலுங்கானா மாநிலத்திற்குள் கடந்த சில நாட்களுக்கு நுழைந்து நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. இந்த நிலையில் இன்று பத்ராசலம் பகுதி பழங்குடியின மக்களை சந்தித்த அவர், தலையில் கொம்பு அணிந்து பாரம்பரிய கொம்மு கோயா நடனத்தை ஆடினார். அதன் தொடச்சியாக விவசாயி ஒருவரின் ஆட்டை தூக்கிய அவர் கழுத்தில் அதை வைத்தபடி நடந்தார்.

English summary
A video of Congress MP Rahul Gandhi in Telangana, who started the Bharat jodo Yatra in Kanyakumari district, carrying a lamb around his neck and wearing a horn on his head, has been widely shared on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X