தெலுங்கானா காங். போராட்டம்-போலீஸ் சட்டையை பிடித்து அலேக்காக தூக்கிய ரேணுகா சவுத்ரி.. பரபர வீடியோ
ஹைதராபாத்: தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியினர் இன்று நடத்திய ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தின் போது அக்கட்சியின் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி, போலீஸ் ஒருவரின் சட்டசையை கொத்தாக பிடித்து கேள்வி கேட்கும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் 3 நாட்களாக அமலாக்கத் துறையினர் 30 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். ராகுல் காந்தியை இலக்கு வைத்து மத்திய அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்த காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

டெல்லியில் கடந்த 3 நாட்களாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்.பிக்கள் என பலரும் முழுவீச்சில் போராட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் எம்.பிக்கள் பலர் குண்டு கட்டாக போலீசால் தூக்கி எறியப்பட்டனர். மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் மற்றும் ஜோதிமணி எம்.பி உள்ளிட்டோர் போலீசால் தாக்கவும் செய்யப்பட்டனர். இது தொடர்பாக லோக்சபா, ராஜ்யசபா தலைவர்களிடம் காங்கிரஸ் தலைவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
மேலும் நாடு முழுவதும் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை நடத்தவும் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் பிரம்மாண்ட முறையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நட்ந்த ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற காங்கிரசார் திடீரென வாகனங்களுக்கு தீ வைத்தனர். அரசு பேருந்துகளில் ஏறி நின்று முழக்கம் எழுப்பினர். பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கமிட்டு கொடும்பாவியும் கொளுத்தினர்.
இத்தனை களேபரங்களுக்கு நடுவே திடீரென காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி, போலீஸ் ஒருவரது சட்டையைப் பிடித்து கொத்தாக தூக்கிக் கொண்டிருந்தார். இது ஹைதராபாத் ஆளுநர் மாளிகை முன்பாக பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அங்கு குவிந்த போலீசார், ரேணுகா சவுத்ரியின் பிடியில் இருந்து அந்த போலீசாரை விடுவித்தனர். அத்துடன் ரேணுகா சவுத்ரியை இழுத்துக் கொண்டு போலீஸ் வேனில் ஏற்றினர். தம்மிடம் அந்த போலீஸ்காரர் தவறாக நடந்து கொண்ட காரணத்தாலேயே அவரது சட்டையைப் பிடித்தேன் என விளக்கம் தந்துள்ளார் ரேணுகா சவுத்ரி. சமூக வலைதளங்களில் ரேணுகா சவுத்ரி, போலீஸ்காரரது சட்டையை பிடித்து வாக்குவாதம் செய்யும் வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications