ரூ.31,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி! மோடி செய்யாததை நாங்க செய்றோம்.. ரேவந்த் ரெட்டி பெருமிதம்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்திருக்கிறார்.
தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிது. முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றவுடன், தேர்தலின்போது கொடுத்திருந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற தொடங்கினார். குறிப்பாக மகளிருக்கு இலவச பேருந்து சேவை நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், இதனை தொடர்ந்து மற்றொரு தேர்தல் வாக்குறுதியான விவசாயிகளின் கடன் தள்ளுபடி நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.

ரூ.2 லட்சம் வரை விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், இதற்காக ரூ.31,000 கோடி செலவாகும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி தொடங்கி, 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரேவந்த் ரெட்டி, "பாரத ராஷ்டிர சமிதியின் முந்தைய அரசாங்கம் நான்கு தவணைகளில் ரூ.1 லட்சம் வரையிலான கடனைத் தள்ளுபடி செய்ததைப் போலன்றி, ஒரே நேரத்தில் ரூ.2 கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். முந்தைய அரசு 2014 தொடங்கி 2023 வரை ரூ.28,000 கோடி வரையிலான கடனை தள்ளுபடி செய்தது. ஆனால், நாங்கள் ரூ.31,000 கோடி மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்கிறோம்.
கடந்த 2022ம் ஆண்டு எங்கள் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதியை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருந்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. எனவே வேளாண் தொழில் இனி நஷ்டத்தில் இயங்காது என்கிற செய்தியை நாங்கள் இதன் மூலம் சொல்ல விரும்புகிறோம்.
விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கடந்த 10 ஆண்டுகளாக மோடி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்றாமல் இருக்கும் நிலையில், வெறும் 8 மாதங்களில் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம்" என்று கூறியுள்ளார். அதேபோல விவசாய பண்டு திட்டத்தின் கீழ் ஆண்டு ரூ.10,000 வழங்கப்பட்டு வந்திருந்தது. இது இனி வரும் காலங்களில் ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெலுங்கானா காங்கிரஸ் அரசு கூறியிருக்கிறது.
காங்கிரஸ் அரசின் இந்த கடன் தள்ளுபடி திட்டம் தெலுங்கானா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஜூலை 15ம் தேதி தெலுங்கானா சட்டப்பேரவையில் விரிவான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் விவசாயிகளுக்கு மேலும் சில சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications