கணவனை பழிவாங்க பிள்ளைகளின் மண்டையில் பீர் பாட்டிலால் அடித்துக்கொன்ற பேய்

கணவன் மனைவி சண்டையில் குழந்தைகள் மாட்டிக்கொண்டு முழிப்பார்கள். கணவனை பழிவாங்க பிள்ளைகளை பீர்பாட்டிலால் அடித்து கொலை செய்திருக்கிறார் ஒரு பெண். தெலுங்கானாவில் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கணவன் மனைவி தகராறு பிள்ளைகளின் உயிரை காவு வாங்கியுள்ளது. அடித்த கணவனை பழிவாங்க பிள்ளைகளை மண்டையில் பீர் பாட்டிலால் அடித்து கொன்றுள்ளார் ஒரு பேய். தெலுங்கானா மாநிலத்தில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சித்திப்பேட் நகரைச் சேர்ந்தவர் தம்பதி சித்யாலா பாஸ்கர். கார் டிரைவரான இவர் தனது முதல்மனைவியை விவாகரத்து செய்து விட்டு வேறு சமூகத்தைச் சேர்ந்த சரோஜாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

Telangana Woman kills two sons

திருமணம் நடந்த நாளில் இருந்தே இந்த தம்பதியினருக்கு சண்டைதான். பாம்பு, கீரியாக சண்டை போட்டாலும் அவ்வப்போது சமாதானம் ஆகி விடுவார்கள். இந்த தம்பதியனருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகனுக்கு 5 வயது, இரண்டாவது மகனுக்கு இரண்டரை வயது.

சில தினங்களுக்க முன்பு பாஸ்கருக்கும் சரோஜாவிற்கு இடையே சண்டை ஏற்பட்டது. இதில் கடும் கோபம் அடைந்த சரோஜா கணவன் வேலைக்கு போன நேரத்தில் பீர் வாங்கிக்கொண்டு வந்து குடித்தார். போதை தலைக்கு ஏறவே, கணவனை பழிவாங்க திட்டமிட்டார்.

இதற்காக அவர் கண்ணில் பட்டது குழந்தைகள்தான். பிஞ்சு குழந்தைகள் என்றும் பாராமல் அவர்களின் வாயில் துணியை அடைத்தார். கைகளையும் கட்டினார். டிவியின் சத்தத்தை அதிகமாக்கினார். குழந்தைகள் கதற கதற அவர்களின் தலையில் பீர் பாட்டிலால் ஓங்கி அடித்தார். இதில் குழந்தைகள் ரத்தம் வழிய மயங்கி விழுந்தனர். தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்ட சரோஜா போதை தெளிந்த உடன் மனதை மாற்றிக்கொண்டு நேராக காவல்நிலையம் போய் சரணடைந்தார். சரோஜாவை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாஸ்கர் வீட்டிற்கு வந்து பார்த்த போது உயிரிழந்த நிலையில் இரண்டு குழந்தைகளும் கட்டிலில் சடலமாக கிடந்தனர். அதிர்ச்சியடைந்த பாஸ்கர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே, சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப தகராறில் பெற்ற தாயே குழந்தைகளை கொடூரமாக கொன்ற சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+