செம நியூஸ்! இரட்டை குழந்தைகளை இழந்த தம்பதிக்கு.. 2 ஆண்டுகளுக்கு பின் அதே நாளில் காத்திருந்த சப்ரைஸ்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் விபத்து ஒன்றில் இரட்டை குழந்தைகளை இழந்த தம்பதிக்கு, 2 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் அதே நாளில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்பல ராஜூ. கண்ணாடி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் இவரது மனைவி பாக்யலட்சுமி. இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் இருந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், 2019ஆம் ஆண்டு செப். 15ஆம் தேதி தெலுங்கானாவின் பத்ராச்சலத்தில் அமைந்துள்ள ராமர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். அங்கு இருந்து நீரோடையில் படகு பயணம் செய்த போது, எதிர்பாராத விதமாகப் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் இரட்டையர்கள் உயிரிழந்தனர். அதேபோல அப்பல ராஜூவின் தாயும் இந்த விபத்தில் உயிரிழந்தார். தங்கள் இரண்டு குழந்தைகளையும் ஒரே நாளில் இழந்ததில் அப்பல ராஜூ - பாக்யலட்சுமி தம்பதி விரக்தியின் உச்சத்திற்குச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து அந்த ஜோடி குழந்தை வேண்டி கருவுறுதல் மையத்திற்குச் சென்றுள்ளனர். இந்தச் சூழலில் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர், இரட்டை குழந்தைகளை இழந்த அதே நாளில் (செப். 15 2021) அப்பல ராஜூ - பாக்யலட்சுமி தம்பதிக்குக் குழந்தை பிறந்துள்ளது. இப்போது பிறந்துள்ள குழந்தைகளும் இரட்டை குழந்தைகள் என்பது மற்றொரு சிறப்பாகும்.
அதாவது எந்த நாளில் தங்கள் இரட்டை குழந்தைகளை இவர்கள் இழந்தார்களோ, அதே நாளில் இவர்களுக்கு மீண்டும் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. தங்கள் அதே நாளில் குழந்தை பிறக்கும் என்பதையும் சரி, இது இரட்டை குழந்தைகளாக இருக்கும் என்பதையும் சரி சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று பாக்யலட்சுமி தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications