ஒரு சின்ன விஷயத்துக்காக.. விபரீத முடிவெடுத்து வாழ்க்கையை தொலைத்த பெண்.. அதிர்ந்துபோன கணவர்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஆம்பர்பேட்டை கோல்நக திருமலா நகரில் வசித்து வந்தவர் விஜயலட்சுமி. இவருக்கு வயது 35. இவரது கணவர் ஸ்ரீநிவாஸ். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ஸ்ரீநிவாஸ் வீடு, வீடாகச் சென்று புடவைகள் மற்றும் ரவிக்கைப் பொருட்களை விற்று வருமானம் ஈட்டி வருகிறார். மேலும், டெய்லரான அவர் வீடுகளில் துணிகளை தையல் செய்தும் வாழ்வாதாரம் நடத்தி வருகிறார்.

கதவு திறக்கப்படவில்லை

கதவு திறக்கப்படவில்லை

இந்த நிலையில் கணவர் வெளியே சென்ற நிலையில் குழந்தைகளும் பள்ளிக்கு சென்றனர். பின்னர் மாலை குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது தாய் விஜயலட்சுமி இல்லாதது கண்டு திடுக்கிட்டனர். படுக்கையறை கதவு மூடப்பட்டிருப்பதைக் கண்டனர். தொடர்ந்து கதவை தட்டியபோதும் கதவு திறக்கப்படவில்லை.

 பிணமாக கிடந்தார்

பிணமாக கிடந்தார்

இது பற்றி அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். ஸ்ரீநிவாஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் அவர் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது படுக்கையில் விஜயலட்சுமி பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ரவிக்கை தைத்து கொடுக்கும்படி..

ரவிக்கை தைத்து கொடுக்கும்படி..

உடனடியாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டனர். இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது கணவர் டெய்லர் என்பதால் விஜயலட்சுமி அவரிடம் ரவிக்கை தைத்து கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

கடும் வாக்குவாதம்

கடும் வாக்குவாதம்

அதன்பேரில் கணவரும் ரவிக்கை தைத்து கொடுத்தார். ஆனால் அந்த ரவிக்கை விஜயலட்சுமி விரும்பியதன்பேரில் அமையவில்லை. ரவிக்கையை ஆல்டர் செய்து கொடும்படி விஜயலட்சுமி கேட்டபோது ஸ்ரீநிவாஸ் மறுத்து விட்டார். இது தொடர்பாக கணவருக்கும், அவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விரக்தி அடைந்த விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+