5T பார்முலா.. பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் செயல்படுத்துங்க... ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ‛அட்வைஸ்’
புவனேஸ்வர்: 5T பார்முலாவை பயன்படுத்தி ஒவ்வொருவரும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் மூலம் கிராமங்களை மேம்படுத்தி முன்மாதிரியாக்க முயற்சிக்க வேண்டும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறினார்.
ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். மாநில மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கிராமப்பகுதிகளை மேம்படுத்துவதிலும், அனைத்து கிராமங்களுக்கும் அரசின் சேவைகள் சென்று சேரவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.

வழிக்காட்டுதல் நிகழ்ச்சி
அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் (பிஆர்ஐ உறுப்பினர்கள்) புதிதாக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த உறுப்பினர்களுகான வழிக்காட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் முதல்வர் நவீன் பட்நாயக் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

பெண்கள் அதிகம்
பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் உறுப்பினராக தேர்வு செய்துள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். ஒவ்வொரு கிராமத்தில் உள்ள பிரச்சனைகளையும் சொந்த பிரச்சனையாக கருதி தீர்வு காண வேண்டும். இதில் நேர்மையான முயற்சியில் செயல்பட வேண்டும். இந்த முறை அதிக இடங்களில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் பெண்களுக்கான அதிகாரம் வழங்குவதை இது உறுதி செய்கிறது. பொதுமக்களிடம் அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளை கொண்டு சேர்க்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஏழைகள், பெண்கள், மற்றும் ஒடுக்கப்பட்டவர்களாக கூறப்படும் பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.

புனிதமாக கருதி பணி
ஒவ்வொருவரும் தங்கள் கிராமத்தின் வளர்ச்சியில் 5Tயை (Team work(குழுவாக பணி செய்தல்), technology(தொழில்நுட்பம் பயன்படுத்துதல்), transparency(வெளிப்படைத்தன்மை), transformation(மாற்றத்தை ஏற்படுத்துதல்) and time limit(நேரவரம்புடன் பணி செய்தல்) பின்பற்ற வேண்டும். இதன்மூலம் கிராமம், பஞ்சாயத்து செயல்பாடுகள் முன்மாதிரியாக மாறலாம். பொதுமக்கள் நம் மீது அதிக நம்பிக்கையை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கையை நாம் வீணடித்து விடக்கூடாது. இதை புனிதமாக கருதி அவர்களுக்கான பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாக மேற்கொள்ள வேண்டும் '' என்றார்.

திட்ட விளக்கம்
இதில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் குடிநீர் வினியோகத்துறை அமைச்சர் பிரதாப் ஜெனா பேசினார். அப்போது மாநில வளர்ச்சியில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் பங்கு மற்றும் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்து கூறி விளக்கினார்.

பிராட்பேண்ட் சேவை
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் மனோஜ் குமார் மிஸ்ரா பேசுகையில், ‛‛விரைவில் முக்கிய இடங்களில் 'மோ செபா கேந்திரா' திறக்கப்படும். ஒடிசா அரசின் 5T திட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் இன்டர்நெட் பிராட்பேண்ட் சேவைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. மேலும் இதற்காக பல்நோக்கு டிஜிட்டல் அறை உருவாக்கப்படும். இந்த அறையானது மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கும் பயன்படுத்தப்படுவதோடு, மக்களையும் அரசோடு இணைத்து வைக்கும். எல்டபிள்யூஇ பகுதியில் 480 டவர்கள் அமைத்து 3,993 கிராமங்களுக்கு 2023க்குள் புதிய இணைப்புகள் வழங்கப்படும். இதற்கு பஞ்சாயத்து ராஜ் உறுப்பினர் உதவி செய்ய வேண்டும்.

12 மாதத்தில் மாநில அளவில் கூட்டமைப்பு
மிஷன் சக்தி துறை செயலாளர் சுஜாதா பேசுகையில், ‛‛முதல்வர் நவீன் பட்நாயக்கின் உத்தரவுப்படி ஒடிசாவில் பெண்களின் சமூக-பொருளாதாரத்துக்கு அதிகாரமளிக்கும் வகையில் அடுத்த 12 மாதங்களில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான மாநில அளவிலான கூட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இந்த கூட்டமைப்பானது சுய உதவிக்குழு இயக்கத்திற்கு நல்ல ஆதரவு வழங்கும். குறிப்பிட்ட விஷயத்தில் முடிவெடுப்பதில் பெண்களின் பங்களிப்பை கூட்டமைப்பு ஊக்குவிக்கும். வாழ்வாதார முன்முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு ஆயிரக்கணக்கில் எஸ்எம்இக்கள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.50 ஆயிரம் கோடி கடன்
மாநிலத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் 6,800 கோடி ரூபாய் அளவுக்கு கடன் உதவி பெற்றுள்ளன. இந்த ஆண்டு ரூ.9000 கோடி கடனுதவி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.50,000 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சுயஉதவி குழுக்களின் பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் 500 மிஷன் சக்தி பஜார்கள் உருவாக்கப்படும். வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும். இதுமட்டும் இன்றி சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட சுவையான உணவுகளை சந்தைப்படுத்துவதற்காக 500 மிஷன் சக்தி கபேக்கள் தொகுதிகள் வாரியாக அமைக்கப்படும். அடுத்த ஆண்டு முதல் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு லைன்மேன் பயிற்சி அளிக்கப்படும்'' என்றார்.

மகளிர் சுய உதவிக்குழுக்கு முக்கியத்துவம்
ஒடிசாவை பொறுத்தமட்டில் மகளிர் சுயஉதவிக்குழு திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன்மூலம் திணை வகை பயிர் விளைச்சல் உள்பட ஏராளமான திட்டங்களை வழங்கி வருவதுடன் சுயதொழில்களையும் ஊக்கப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ரணேந்திர பிரதாப் ஸ்வைன், வேளாண் மற்றும் விவசாயிகள் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் அருண் சாஹூ, மிஷன் அமைச்சர் சக்தி துகுனி சாஹு, தலைமை செயலாளர் சுரேஷ் சந்திர மொஹபத்ரா ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications