For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கத்தாருக்குப் போய் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 1000 .. 4 ஆண்டுகளில்

Google Oneindia Tamil News

டெல்லி: கத்தார் நாட்டுக்கு வேலைக்குப் போன இடத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 1000 இந்தியத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

2022ம் ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை கத்தார் நடத்தவுள்ளது என்பது நினைவிருக்கலாம்.

அதிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஏன் இந்த மரணங்கள்

ஏன் இந்த மரணங்கள்

கத்தார் அரசும் சரி, அந்த நாட்டு நிறுவனங்களும் சரி ஊழியர்ளுக்கான பாதுகாப்பையும், அவர்களின் நலனிலும் உரிய அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ஆனால், இயல்பானவை என்கிறது இந்தியத் தூதரகம்

ஆனால், இயல்பானவை என்கிறது இந்தியத் தூதரகம்

ஆனால் இந்தியத் தூதரகமோ அப்படியெல்லாம் இல்லை. இவை அனைத்துமே இயல்பானவைதான், எந்தவிதமான அலட்சியத்தாலோ அல்லது கவனக்குறைவாலோ இந்த மரணங்கள் சம்பவிக்கவில்லை என்று கூறுகிறது.

இந்தியர்கள்தான் பெரும்பான்மை

இந்தியர்கள்தான் பெரும்பான்மை

கத்தாரில் உள்ள பல்வேறு இன க் குழுக்களில் இந்தியத் தொழிலாளர்கள்தான் மெஜாரிட்டியானவர்கள். 2012ம் ஆண்டு நிலவரப்படி இங்கு கிட்டத்தட்ட 5 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் உள்ளனர்.

26 சதவீதம் பேர்

26 சதவீதம் பேர்

கத்தார் மக்கள் தொகையில் இது 26 சதவீதம் ஆகும். பெரும்பாலான இந்தியர்கள் இங்கு சாதாரண வேலைகளில்தான் ஈடுட்டுள்ளனர். இவர்களுக்கு மிகவும் குறைந்த அளவிலான ஊதியமே வழங்கப்படுகிறது.

இந்தியர்கள்தான் அதிக அளவில் இறக்கிறார்கள்

இந்தியர்கள்தான் அதிக அளவில் இறக்கிறார்கள்

மேலும் இந்தியத் தொழிலாளர்கள் மத்தியில்தான் இறப்பு விகிதமும் அதிகமாக இருக்கிறதாம். ஆனால் இதை இந்தியத் தூதரகம் மறைப்பது போல செயல்படுவதுதான் ஆச்சரியமாக உள்ளது.

கத்தாரைப் பாராட்டிப் புகழும் இந்தியத் தூதரகம்

கத்தாரைப் பாராட்டிப் புகழும் இந்தியத் தூதரகம்

இந்தியத் தொழிலாளர்கள் மத்தியில் இறப்பு விகிதம் அதிகம் இருந்தும் கூட, இந்தியத் தொழிலாளர்கள் நலனில் கத்தார் அரசு மிகுந்த அக்கறை காட்டுவதாக புகழ்ந்து தள்ளிப் பேசுகிறது இந்தியத் தூதரகம்.

விலங்குகளைப் போல நடத்தும் கத்தார் ஆம்னெஸ்டி சாடல்

விலங்குகளைப் போல நடத்தும் கத்தார் ஆம்னெஸ்டி சாடல்

ஆனால்ஆம்னெஸ்ட் இன்டர்நேஷனல் அமைப்போ, கத்தாரில் பிற நாட்டுத் தொழிலாளர்களை விலங்குகள் போல நடத்துவதாக கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் அது சாடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Almost 1,000 Indians have died in Qatar in the last four years, with over 500 workers dying in the past two- and-a-half years alone, according to an AFP report. Qatar is the host of the 2022 football World Cup. While some human rights groups have latched on to the figure to highlight Qatar's allegedly abysmal rights record, the Indian embassy said there was nothing abnormal about it considering the large Indian community there and the fact that many of these deaths were due to natural causes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X