For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'பேரக்குழந்தைகள் படிக்கணும்.. அதுக்கு தான் எல்லாம்..' 100 வயதிலும் ஓயாமல் உழைக்கும் முதியவர்

Google Oneindia Tamil News

அமிர்தசரஸ்: சமீபத்தில், 100 வயது முதியவர் ஒருவர் தனது பேரக்குழந்தைகளின் கல்விக்காகத் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் வீடியோ வைரலான நிலையில், அந்த முதியவருக்கு பல்வேறு உதவிகள் குவிந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹர்பன்ஸ் சிங். 100 வயதான ஹர்பன்ஸ் சிங் தனது பேரக்குழந்தைகளின் கல்விக்காகத் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து வருகிறார்.

சூப்பர்..! 5 ஆண்டுகளுக்கு பின் ஜெயலலிதா இருந்த.. அதே அப்பல்லோவில் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய சசிகலாசூப்பர்..! 5 ஆண்டுகளுக்கு பின் ஜெயலலிதா இருந்த.. அதே அப்பல்லோவில் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய சசிகலா

இது தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வைரலானது. அதைத் தொடர்ந்து பலரும் அவருக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர்.

 காய்கறி விற்கும் 100 வயது முதியவர்

காய்கறி விற்கும் 100 வயது முதியவர்

100 வயதான ஹர்பன்ஸ் சிங், பஞ்சாப் மாநிலம் மோகா என்ற நகரத்தில் வசித்து வருகிறார். இவர் தனது பேரக்குழந்தைகளின் கல்விக்காக இந்த தள்ளாத வயதிலும் காய்கறி விற்பனை செய்து வருகிறார். அந்த சிறுவர்களின் தந்தை (ஹர்பன்ஸ் சிங்கின் மகன்) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். சிறுவர்களின் தாயும் அவர்களைக் கைவிட்டுவிட்டார். இதனால் வயதைக்கூடப் பொருட்படுத்தாமல் பேரக்குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை தன்னிடம் எடுத்துக் கொண்டார் ஹர்பன்ஸ் சிங்.

 வைரல் வீடியோ

வைரல் வீடியோ

கடந்த சில நாட்களுக்கு முன், இவர் 200 கிலோ எடையுள்ள காய்கறிகளைத் தள்ளுவண்டியில் போட்டு இழுத்துச் செல்லும் வீடியோ அனைவரது இதயத்தையும் உலுக்கச் செய்தது. இந்த வீடியோ இணையத்திலும் வைரலானதைத் தொடர்ந்து பல்வேறு நபர்களும் ஹர்பன்ஸ் சிங்கிற்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர். குறிப்பாகப் பஞ்சாப் முதல்வர் அமிரீந்தர் சிங்கும் அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் உதவிகளை அறிவித்துள்ளார்.

 பஞ்சாப் அரசு

பஞ்சாப் அரசு

இது குறித்து பஞ்சாப் முதல்வர் அமிரீந்தர் சிங் தனது ட்விட்டரில். "மோகாவைச் சேர்ந்த 100 வயது ஹர்பன்ஸ் சிங், தனது பேரக்குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள இந்த வயதிலும்கூட காய்கறி விற்பனை செய்து வருகிறார். சிறுவர்களின் கல்விக்கு உதவும் வகையில் பஞ்சாப் அரசு சார்பில் ஐந்து லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது" எனப் பதிவிட்டுள்ளார் ஊடகங்களில் இந்த முதியவர் குறித்த செய்திகள் வெளியானவுடனேயே மோகா மாவட்ட நிர்வாகம் அவரை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்திருந்தது.

 தன்னார்வ அமைப்பு

தன்னார்வ அமைப்பு

மேலும், பல தன்னார்வ அமைப்புகளும் கூட இப்போது ஹர்பன்ஸ் சிங்கிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளன. கல்சா எய்ட் என்ற தன்னார்வ அமைப்பு அவருக்கு வாழ்நாள் முழுவதும் பென்சன் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஹர்பன்ஸ் சிங் இன்றைய பாகிஸ்தானின் லாகூர் அருகிலுள்ள கிராமம் ஒன்றில் பிறந்தவர். பிரிவினையின் போது, தனது 27 ஆவது வயதில் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

English summary
Recently, photos and videos of a 100-year old man pulling a vegetable cart went viral on social media. CM Captain Amarinder Singh announced Rs. 5 lakh as immediate financial assistance for him and his grandchildren's education.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X