Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதல் திருமணம்.. அக்காவை படுகொலை செய்த தம்பி.. தலையை துண்டித்து தாயும், மகனும் செல்பி எடுத்த கொடூரம்

Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்தில் உள்ள வைஜாப்பூர் தாலுகாவில் உள்ள லட்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். அவரும் அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரும் காதலித்து வந்தனர்.

Recommended Video

    காதல் திருமணம்… மகள் கௌரவ படுகொலை… தலையுடன் செல்பி எடுத்த தாய், மகன்!

    கல்லுரியில் படித்தபோது இருவருக்கும் காதல் மார்லண்டதற்க்ஜ் இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர். அதைத் தொடர்ந்து பெண்ணின் பெற்றோர் மகளை காணவில்லை என்று வைஜாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

     தஞ்சம் புகுந்தனர்

    தஞ்சம் புகுந்தனர்

    இதற்கிடையே எட்டு நாட்களுக்குப் பிறகு ஜூன் 21 அன்று காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து இருவரும் வைஜாப்பூர் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து சமாதானம் பேசினார்கள். இதன் பிறகு அவர்களின் வாழ்க்கை பிரச்சினை ஏதும் இல்லாமல் நகர்ந்து சென்றது.

    தலையை துண்டாக வெட்டினார்

    தலையை துண்டாக வெட்டினார்

    இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பெண், கணவருடன் தனது தாய் வீட்டுக்கு சென்றார். மனைவியின் தாய் மற்றும் சகோதரனைச் சந்தித்த பிறகு, அவரது கணவர் உடல்நிலை சரியில்லாததால் வேறு அறைக்குச் சென்றார். அதன் பிறகு அந்த பெண் சமையலறைக்கு சென்று டீ தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது பெண்ணின் சகோதரர் 17 வயது சிறுவன் சகோதரி என்றும் பாராமல் தான் வைத்திருந்த அரிவாளால் பெண்ணின் தலையை துண்டாக வெட்டினார். அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

     கடும் கோபம்

    கடும் கோபம்

    இதன்பிறகு பெண்ணின் சகோதரனும், தாயும் துண்டிக்கப்பட்ட தலையுடன் செல்பி எடுத்த கொடூரமும் நிகழ்ந்துள்ளது. பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து வந்து தாய் மகனை கைது செய்தனர். இது பற்றி வைஜாபூரின் சப்-டிவிஷன் போலீஸ் அதிகாரி கைலாஷ் பிரஜாபதி கூறுகையில், 'பெண் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதால் சிறுவனும், அவனது தாயும் கோபத்தில் இருந்தனர்.

    சைரத் படம் பார்த்து...

    சைரத் படம் பார்த்து...

    பெண்ணின் தலையை வெட்டி, அதனுடன் இருவரும் செல்ஃபி எடுத்தது போல் தெரிகிறது. செல்போனை கைப்பற்றி பார்த்தபோது அதில் செல்பி படம் இல்லை. தாய்-மகன் இருவரும் படத்தை நீக்கியுள்ளனர் என்று அவர் கூறினார். அந்த செல்பி புகைப்படம் ஒரு முக்கிய ஆதாரமாக இருப்பதால் அதை மீட்டெடுப்பதற்காக தடயவியல் ஆய்வுக்கு போலீசார் செல்போனை அனுப்பியுள்ளனர். மராத்தி படமான சைரத்தில் இதுபோன்று ஒரு ஆணவப்படுகொலை காட்சி வரும். அந்த படத்தை பார்த்து அதேபோல் சகோதரியை வெட்டியதாக கைதான சிறுவன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+