கும்பமேளா ஷாக்- நிர்வாண சாதுக்கள் தலைவர் கொரோனாவுக்கு பலி- ஒரே நாளில் 2,220 பேருக்கு பாதிப்பு!
ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் தொற்று ருத்ரதாண்டவமாடுகிறது. கும்பமேளாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,220 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அத்துடன் நிர்வாண சாதுக்கள் அமைப்பான நிர்வாணி அகாடா தலைவர் கபில்தேவ் தாஸ் கொரோனாவுக்கு பலியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கும்பமேளாவைவிட்டு சாதுக்கள் வெளியேறி வருகின்றனர்.
Recommended Video
ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இந்துக்களின் புனிதமான நாட்களில் ஹரித்வார் கங்கை நதியில் புனித நீராடினால் நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதற்காகவே கும்பமேளாவில் பல லட்சக்கணக்கானோர் திரண்டு ஒரே நேரத்தில் கங்கை நதியில் புனித நீராடுவர். இந்த ஆண்டு கொரோனா தாக்கம் இருந்த நிலையில் 3 மாதங்கள் நடைபெற வேண்டிய கும்பமேளா நிகழ்வுகள் 2 மாதங்களாக குறைக்கப்பட்டன. ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஹரித்வார் நகரில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் அலை அலையாக அணி திரண்டனர்.

ஹரித்வாரில் பெரும் அச்சம்
இப்படி பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் குவிந்ததால் கொரோனா கால கட்டுப்பாடுகள் எதனையும் உத்தரகாண்ட் மாநில அரசால் கடைபிடிக்க முடியவில்லை. கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிடப்பட்ட காரணத்தால் இப்போது ஹரித்வார் புனித நகரமே பெரும் அச்சத்தில் உறைந்து கிடக்கிறது.

காப்பாற்றுவார் கங்காதேவி
இது தொடர்பாக முன்னர் கருத்து தெரிவித்த உத்தரகாண்ட் முதல்வர் தீரத்சிங் ராவத், ஹரித்வார் நகரில் கங்காதேவி ஆறாக ஓடுகிறார். கொரோனாவில் இருந்து அவர் எங்களை காப்பாற்றுவார் என்றார். ஆனால் இப்போது வட இந்திய இந்துக்களால் கடவுள்களின் அம்சங்களாக போற்றப்படுகிற சாதுக்களின் தலைவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி உள்ளனர்.

நிர்வாண சாது தலைவர் மரணம்
ஹரித்வாரில் முகாமிட்டிருந்த நிர்வாண சாதுக்களின் அமைப்பான மகாநிர்வாணி அகாடாவின் தலைவர் (மகாமண்டலேஸ்வர்) கபில் தேவ் தாஸ் (65) கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் கபில்தேவ் தாஸ் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாதுக்கள் கும்பமேளாவை கைவிட்டு விட்டு தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பி உள்ளனர்.

ஜூனா அகாடா வெளியேறியது
சாதுக்களுக்காக மொத்தம் 13 அமைப்புகள் உள்ளன. இவைதான் அகாடாக்கள் அல்லது அகாராக்கள் என அழைக்கப்படும். இவற்றில் பெரிய எண்ணிக்கையிலான சாதுக்களை கொண்டது ஜூனா அகாடா. இந்த ஜூனா அகாடா சாதுக்களும் கும்பமேளாவைவிட்டு வெளியேறிவிட்டனர். இவர்களைத் தொடர்ந்து மற்றொரு சாதுக்கள் அமைப்பான நிரஞ்சனி அகாடாவும் வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது.

2220 பேருக்கு கொரோனா
இதனிடையே ஹரித்வார் நகரில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2,220 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் மிக அதிகமான உச்சகட்டமான பாதிப்பு இது. இதனால் ஹரித்வார் நகரில் கூட்டம் தொடர்ந்து குவிந்து வந்தால் இதைவிட மிக மோசமான ஆபத்துகளும் அழிவுகளும் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications