உடல் உறுப்பு செயல்பாடுகளால் உயிருக்கு போராடும் 2 வயது சிறுவனுக்கு உதவுங்களேன்
ஹைதராபாத்: உடல் உறுப்பு பாதிப்புகளால், கஷ்டப்படும் 2 வயது சிறுவனுக்கு நீங்கள் உதவிக்கரம் நீட்டுங்கள்.
மொகுலப்பா மற்றும் பத்மம்மா ஆகிய கூலித்தொழிலாளிகளின் மகன்தான் பாதிக்கப்பட்ட சிறுவன். அவர்களின் வார்த்தைகளில் நடந்தவற்றை நீங்களே பாருங்கள்:
பீமா ஷங்கருக்கு உதவ முன்வருவோர், இங்கே க்ளிக் செய்து வங்கி அக்கவுண்ட் தகவல்களை பெறவும்...
இந்து புராணத்தில் பாண்டவர்களில் இரண்டாவதாக குறிப்பிடப்படுபவர், பீமா. அவரது பெயரைத்தான் எங்கள் 2வயது மகனுக்கு பீமாசங்கர் என பெயர் வைத்தோம். அதற்கு ஏற்ப பீமாசங்கர் சுட்டியாக விளையாடி வருவார். அவர் ஒரு 'நாட்டி பாய்'.

ஆனால், சமீபத்தில், அவரது உடல்நிலையில் சில மாற்றங்களை பார்த்தோம். சிறிது நேரம் விளையாடியதுமே, மிகவும் சோர்வடைந்து காணப்பட்டார். அவரது உடலில் சிவப்பு புள்ளிகள் வந்ததை பார்த்தோம்.
தெலுங்கானாவிலுள்ள மெகபூப்நகரிலுள்ள ஒரு கிராமத்தில்தான், நாங்கள் வசித்து வருகிறோம். நானும், எனது மனைவியும், விவசாய கூலிகளாக வேலை பார்க்கிறோம். பெரிய அளவில் வருமானம் கிடைக்காவிட்டாலும், குறை சொல்லும் அளவிற்கு எங்கள் வாழ்க்கை இருந்தது இல்லை.
எங்கள் மூத்த மற்றும் ஒரே மகன் பீமாசங்கர்தான். இப்படி மகிழ்ச்சியாக வாழ்க்கை போய்க்கொண்டு இருந்தபோதுதான், பீமா உடல்நலம் பாதிக்கப்பட்டது. பீமா தொடர்ச்சியாக வாந்தி எடுத்தபோதும், அவருக்கு பிடித்தமான போர்வையே கூட சூடாக்கும் அளவுக்கு காய்ச்சல் அதிகரித்தபோதும், எங்கள் மனம் உடைந்து போய்விட்டது.

நிறைய ஆஸ்பத்திரிகளுக்கு பீமாவை கூட்டிச் சென்று சிகிச்சையளித்தோம். ஆனால், குணமாகவில்லை. இதன்பிறகு, ஹைதராபாத்திலுள்ள லிட்டில் ஸ்டார்ஸ் குழந்தைகள் நல மருத்துவமனையில் பீமாவை சிகிச்சைக்கு சேர்த்தோம். அங்குதான், பீமாவின், கல்லீரல் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதனால்தான் உடல் மீது சிவப்பு புள்ளிகள் தோன்றியுள்ளது. பீமாவின் இதயமும் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பல்வேறு உடல் உறுப்பு செயல்பாடுகளில் பிரச்சினை இருப்பது தெரியவந்தது.
பீமாவின் சிகிச்சை செலவிற்காக எங்கள் உறவுக்காரர்களிடமிருந்து 3 லட்சம் ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கினோம். பீமா இப்போது குழந்தைகளுக்கான ஐசியூ வார்டில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு ரத்த மாற்று சிகிச்சைகள் நடத்த தேவையுள்ளது. இதயம் பலகீனமாக உள்ளதால், பல்வேறு உபகரணங்களை கொண்டுதான், ரத்தம் பம்ப் செய்யப்படுகிறது. உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன்தான் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. பீமாவை உயிரோடு வைத்திருக்க இதுதான் ஒரே சிகிச்சை வழிமுறை. இதற்காக ரூ.10 லட்சம் திரட்ட வேண்டியுள்ளது.

சிகிச்சைக்கு உங்கள் உதவியை நாடுகிறோம். உங்கள் உதவி கிடைத்தால் பீமாசங்கரை காப்பாற்ற முடியும். மிகப்பெரிய போர் வீரரின் பெயரை அவருக்கு சூட்டியுள்ளோம். எனவே, உங்கள் உதவியால், இந்த பிரச்சினையில் இருந்து அவர் மீண்டு வருவார் என நம்புகிறோம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications