For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜம்மு-காஷ்மீருக்குள் 105 தீவிரவாதிகள் பதுங்கல்.. நாடாளுமன்றத்தில் அமைச்சர் திடுக் தகவல்

காஷ்மீர் மாநிலத்தில் நடப்பு ஆண்டு செப்டம்பர் வரையில் 105 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், சுமார் 200 தீவிரவாதிகள் அந்த மாநில எல்லையில் பதுங்கி இருப்பதாகவும் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் நடப்பு ஆண்டு செப்டம்பர் வரையில் 105 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், சுமார் 200 தீவிரவாதிகள் அந்த மாநில எல்லையில் பதுங்கி இருப்பதாகவும் மாநிலங்களவையில் உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து 201 தடைவைகள் ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்றும், அந்த நேரத்தில் 24 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 72 தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர் என்றும், 2 பேர் பாதுகாப்பு படையினரிடம் சரண்டர் ஆகியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

200 terrorists active in J&K, 105 infiltrated till Sept says govt

கடந்த 2015-ம் ஆண்டில் 33 தீவிரவாதிகள் மட்டுமே ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் ஊடுருவியதாகவும் அவர் தெரிவித்தார். அந்தக் காலக்கட்டத்தில் 121 ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் 46 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர் என்றும் ஹன்ஷ்ராஜ் தெரிவித்தார்.

மொத்தத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் 200-க்கும் அதிகமான தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானியர்களின் இந்த ஊடுருவல் முயற்சி தற்போது அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் ஹன்ஸ்ராஜ் குற்றம்சாட்டினார்.

English summary
New delhi: Minister of State for Home Hansraj Ahir, on 16 November, informed the Rajya Sabha that as many as 105 terrorists have infiltrated Jammu and Kashmir in the first nine months of 2016
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X