For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

24 நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் அறிவிப்பு- பாஜகவுக்கு 11; காங்-5, திரிணாமுல்- 2, அதிமுக- 1

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத்தின் 24 நிலைக்குழுக்களுக்கான தலைவர்கள், உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜகவுக்கு 11 நிலைக்குழுக்களும் காங்கிரஸு 5ம் கிடைத்துள்ளன. 2 வலுவான நிலைக் குழுக்களின் தலைவர்கள் பதவிக திரிணாமுல் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது. அதிமுவுக்கு ஒரே ஒரு நிலைக்குழு தலைவர் பதவி கிடைத்திருக்கிறது.

நாடாளுமன்றத்தில் நிலைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளுக்கான பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் மொத்தம் 24 நிலைக்குழுக்கள் இருக்கின்றன. இதில் லோக்சபாவின் கீழ் 16, ராஜ்ய சபாவின் கீழ் 9 நிலைக்குழுக்கள் வரும்.

பாஜகவுக்கு 11

பாஜகவுக்கு 11

கட்சிகளின் பலத்திற்கு ஏற்ற வகையில் நிலைக் குழுக்களின் தலைவர் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு மொத்தம் 324 எம்.பிக்கள் உள்ளனர். அதாவது லோக்சபாவில் 281 பேர், 43 பேர் உள்ளனர். இதன் அடிப்படை யில் 9 லோக்சபா நிலைக்குழுக்கள், 2 ராஜ்யசபா நிலைக்குழுக்கள் அக்கட்சி வசம் சென்றுள்ளது.

காங்கிரஸுக்கு 5

காங்கிரஸுக்கு 5

113 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் (லோக்சபாவில் 44, ராஜ்யசபாவில் 69) கட்சிக்கு 2 லோக்சபா நிலைக் குழுக்கள், 3 ராஜ்ய சபா நிலைக்குழுக்கள் கிடைத்துள்ளன.

அதிமுகவுக்கு 1

அதிமுகவுக்கு 1

நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியான அதிமுகவுக்கு கிராமப்புற மேம்பாட்டு நிலைக்குழு என்ற ஒரே ஒரு லோக்சபா நிலைக்குழு மட்டுமே கிடைத்துள்ளது. அ.தி.மு.க.வுக்கு லோக்சபாவில் 37, ராஜ்யசபாவில் 11 எம்பிக்கள் உள்ளனர்.

திரிணாமுலுக்கு 2

திரிணாமுலுக்கு 2

ஆனால் லோக்சபாவில் 34, ராஜ்யசபாவில் 12 என 46 எம்.பிக்களைக் கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 2 நிலைக்குழுக்கள் கிடைத்துள்ளது. அதுவும் வலுவானதாக கருதப்படுகிற ரயில்வே மற்றும் போக்குவரத்து, கப்பல், சுற்றுலா நிலைக்குழுக்களை திரிணாமுல் காங்கிரஸ் பெற்றுள்ளது. அக்கட்சியின் தினேஷ் திரிவேதி ரயில்வே நிலைக்குழு தலைவராகி இருக்கிறார்.

இதர கட்சிகளுக்கு

இதர கட்சிகளுக்கு

சிவசேனா, தெலுங்குதேசம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு லோக்சபா நிலைக்குழு தலைவர் பதவிகளும் கிடைத்துள்ளன. பகுஜன்சமாஜ், ஐக்கிய ஜனதாதளம் ஆகியவற்றுக்கு, தலா ஒரு ராஜ்யசபா நிலைக்குழு தலைவர் பதவிகள் கிடைத்துள்ளன.

மன்மோகன்சிங்

மன்மோகன்சிங்

நிதித்துறையின் நிலைக்குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவுக்கு தலைவர் காங்கிரசின் மூத்த தலைவர் வீரப்பமொய்லி.

அத்வானி

அத்வானி

தொலைத்தொடர்பு துறை நிலைக் குழுவில் அத்வானி ஒரு உறுப்பினர். இந்த குழுவுக்கு தலைவர் பா.ஜ.,இளைஞர் அணி தலைவரும், எம்.பி.யுமான அனுராக் தாக்கூர்.

English summary
Lok Sabha Speaker Sumitra Mahajan has announced the list of members and chairpersons for 24 department related standing committees of Parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X